94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி "தூத்துக்குடி எஸ்.பியின் அதிரடி நடவடிக்கையால் 36,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள நிலம் மீட்பு....

“தூத்துக்குடி எஸ்.பியின் அதிரடி நடவடிக்கையால் 36,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள நிலம் மீட்பு….

தூத்துக்குடி – செப் -15,2021

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் மோசடி செய்த ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலம் மீட்பு – மாவட்ட கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் 6 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்களை உரிமையாளரிடம் ஒப்படைத்தார்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, கெச்சிலாபுரத்தைச் சேர்ந்தவர் காளிமுத்து மகன் சுடலைமணி (47) என்பவருடைய பெரியப்பாவான கருப்பண்ணன் என்பவருக்கு விளாத்திகுளம் தாலுகா குளத்தூர் வடக்கு கிராம பகுதியில் 6 ஏக்கர் புன்செய் நிலம் பாத்தியப்பட்டது.

கடந்த 40 வருடங்களுக்கு முன்பு கருப்பண்ணன் இறந்து விட்டார். அவரது மனைவியும் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். மேலும் கருப்பண்ணனின் ஒரே மகனும் திருமணம் ஆகாமலே இறந்துவிட்டார். இதனால் வாரிசு அடிப்படையில் கருப்பண்ணனின் தம்பி மகனான சுடலைமணி மேற்படி சொத்துக்களை அனுபவித்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீவைகுண்டம் தாலுகா செய்துங்கநல்லூர் கிராமம் சந்தையடியூரைச் சேர்ந்த செல்லையா மகன் மாரிச்செல்வம் என்பவர் கருப்பண்ணன் உயிரோடு இருப்பது போன்று கருப்பண்ணன் என்ற பெயரில் போலி அடையாள அட்டை தயார் செய்து, அதனை உண்மைபோன்று பயன்படுத்தி மேற்படி நிலத்தை கருப்பண்ணன் பொது அதிகாரம் (General Power) எழுதிக் கொடுப்பது போல 22.03.2021 அன்று கங்கைகொண்டான் சார்பதிவாளர் அலுவலகத்தில் போலியாக பொது அதிகாரம் பதிவு செய்துள்ளார்.

இதுகுறித்து மேற்படி சுடலைமணி என்பவர் தனக்கு சொந்தமான நிலத்தை மீட்டு தருமாறு கடந்த 26.08.2021 அன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம்‌‌‌ புகார் அளித்தார். மேற்படி புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் , தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜெயராம் அவர்களிடம் உரிய விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தேவி விசாரணை மேற்கொண்டு போலியாக பதிவு செய்யப்பட்ட 6 ஏக்கர் நிலத்திற்கான போலி ஆவணங்களை இரத்து செய்து மேற்படி நிலத்தை மீட்டனர்.

மீட்கப்பட்ட ரூபாய் 36,00,000/-லட்சம் (ரூபாய் முப்பத்து ஆறு லட்சம்) மதிப்புள்ள மேற்படி 6 ஏக்கர் நிலத்திற்கான ஆவணங்களை இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் மனுதாரர் சுடலைமணியிடம் ஒப்படைத்தார்.

மேலும் இவ்வழக்கில் விவேகமாக செயல்பட்டு ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலத்தை மீட்டுக்கொடுத்த தூத்துக்குடி நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தேவி மற்றும் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்