திருநெல்வேலி – செப் – 14,2021
நெல்லை மாநகரம் பெருமாள்புரம் பகுதியில், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் தனிப்படை போலீசாரின் தொடர் அதிரடி வேட்டையில் சிக்கிய ரூ 2 லட்சம் மதிப்புடைய சுமார் 140 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல். ஒருவர் கைது.
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அவர்கள் உத்தரவின்படி, நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் அவர்களின் மேற்பார்வையின் கீழ் இயங்கிவரும் தனிப்படையில் காவல் உதவி ஆய்வாளர் காசிப்பாண்டியன் , தலைமை காவலர்கள் முருகன் 201, சண்முகநாதன் 1481, மகாராஜன் 1660, அய்யாபிள்ளை 1654 தங்கதுரை GrI 871, மற்றும் பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் காந்திமதி இணைந்து நடத்திய அதிரடி வேட்டையில் 13-09-2021 ம் தேதி நெல்லை மாநகரம் பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குட்பட்ட ஆரோக்கியநாதபுரம் பகுதியில், மொத்தமாக வாங்கி அருகில் உள்ள கடைகளுக்கு சில்லறை விற்பனைக்கு விநியோகம் செய்து வந்த நபரை ரகசிய கண்காணித்து வீட்டில் பதுங்கியிருந்த, திருநெல்வேலி மாவட்டம் பள்ளிக்கோட்டையை சேர்ந்த அலெக்சாண்டர் என்பவரை சுற்றி வளைத்து, அவரிடமிருந்து ரூ 2 லட்சம் மதிப்புடைய சுமார் 140 கிலோ எடையுடைய புகையிலை பொருட்கள் 10 மூட்டைகள் மற்றும் பணம் ரூ 61,200/ பறிமுதல் செய்த, தனிப்படை போலீசாருக்கு நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் பாராட்டுகளை தெரிவித்தார் . உடன் நெல்லை மாநகர CWC கூடுதல் காவல் துணை ஆணையாளர் சங்கர் பாளையங்கோட்டை உட்கோட்ட சட்டம் ஒழுங்கு காவல் உதவி ஆணையாளர் பாலச்சந்திரன் கலந்து கொண்டார். மேலும் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை, பான் மசாலா, குட்கா போன்ற உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் போதை பொருட்களை விற்பனை செய்த அலெக்சாண்டரை பெருமாள்புரம் காவல் ஆய்வாளர் காந்திமதி அவர்கள் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து,கைது செய்து சிறையில் அடைத்தார்