கிருஷ்ணகிரி – செப் – 21,2021
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் தொலைந்துபோன மற்றும் திருடிய ₹19.75 லட்சம் மதிப்பிலான 109 செல்போன்களை சைபர் கிரைம் காவல்துறை மூலம் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக சாய்சரன் தேஜஸ்வி.IPS பொறுப்பேற்ற பின்பு மாவட்டத்தில் நிலுவையில் உள்ள தொலைந்து போன மற்றும் திருடிய செல்போன் வழக்குகளை விரைந்து கண்டுபிடிக்குமாறு உத்தரவின் பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல் துறையினர் மற்றும் தனிப்படை போலிசாரால் தொலைந்துபோன மற்றும் திருடிய சுமார் ₹19.75 லட்சம் மதிப்பிலான கண்டுபிடிக்கப்பட்ட 109 செல்போன்களை கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரியவர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும் இவ்வழக்கில் துரிதமாக செயல்பட்ட கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்துறையினருக்கு மற்றும் தனிப்படை போலீசாருக்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரன் தேஜஸ்வி IPS தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொண்டார்.