திருநெல்வேலி – செப் – 20,2021
முன்னீர்பள்ளம் கொலை வழக்கில் இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 52 பேர் மீது சட்டநடவடிக்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நடவடிக்கை.
முன்னீர்பள்ளம் அருகே இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன் இ.கா.ப உத்தரவுபடி 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இதுவரை 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் இவ்வழக்கில் உள்ள எதிரிகளை காவல்துறையினர் தேடிரும் நிலையில் குற்றங்கள் நடக்காமல் இருக்க
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 52 பேர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அவர்களில் 27 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.25 பேர் மீது தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர்களின் நடவடிக்கை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.