73.1 F
Tirunelveli
Friday, January 21, 2022
முகப்பு மாவட்டம் தேனி தேனியில் இரு பிரிவினரிடையே மோதல்- -அசம்‌‌‌பாவிதங்‌‌‌களை தடுத்‌‌‌த டி.எஸ்‌‌‌.பி

தேனியில் இரு பிரிவினரிடையே மோதல்- -அசம்‌‌‌பாவிதங்‌‌‌களை தடுத்‌‌‌த டி.எஸ்‌‌‌.பி

தேனி – செப் – 12,2021

செய்தியாளர் -செல்வக்குமார்

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் டெல்லி காவல்துறை பாதுகாப்பு அதிகாரி சபியா பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக் கோரியும் ஐக்கிய ஜமாத், இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு பெரியகுளம் வட்டார ஜமாத்தார்கள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கடந்த மூன்று நாட்களாக ஜமாத்தார்கள் சார்பில் பெரியகுளம் காவல்துறையினரிடம் அனுமதி கேட்டு இன்று (ஞாயிறு) ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளனர்.இந்நிலையில் முன்னாள் தமிழக முதல்வரும், அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களது மனைவி விஜயலட்சுமி அவர்களின் மறைவையொட்டி துக்கம் விசாரிப்பதற்காக பா.ஜ.க தமிழக தேர்தல் பொறுப்பாளர் சி.டி.ரவி., தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் எம்.பி. சி பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் பெரியகுளம் வருகை தந்தனர்.இந்நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலர் பா.ஜ.கவினரை பார்த்து எதிர்ப்பு தெரிவித்ததாகவும், பா.ஜ.கவினர் அதற்கு்‌‌‌ எதிர்‌‌‌ப்‌‌‌பு தெரிவிக்‌‌‌கும்‌‌‌ விதமாக கைகளைக் காட்டி எச்சரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகின்றனது. இதன் காரணமாக இஸ்லாமியர்கள் மற்றும் பா.ஜ.க வினரிடையே மோதல் போக்கு ஏற்படும் சூழல் இருந்த. சூழ்நிலையை கருத்தில் கொண்ட காவல் துறை அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் அதிக அளவில் போலீசாரை பெரியகுளம் பகுதியில் குவித்துள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகளுடன் கலந்து பேசி பிரச்சனைக்கு தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டு வந்தது. இருப்பினும் காவல்துறை ஒரு தலைபட்சமாக செயல்பட்டு இஸ்லாமியர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டாம், காரில் இருந்தவாரே எச்சரிக்கை விடுத்துச் சென்ற பா.ஜ.கவினர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இஸ்லாமிய நலக் கூட்டமைப்பு சார்பில் ஐக்கிய ஜமாத்தார்கள் காவல் துணை கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்து வேண்டுகோள் விடுத்தனர்.புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் உண்மைத்தன்மையை ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இருப்பினும் மோதல் போக்கு ஏற்படாத வகையில் பலத்த போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இப்பிரச்சனையின் காரணமாக பெரியகுளம் பகுதியில் பதற்றம் நிலவி வருகின்றது.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

கர்நாடகாவில்‌‌‌ இருந்து கடத்திவரபட்ட 225,கிலோ குட்கா பறிமுதல் இரண்டு பேர்கைது தனிப்படை போலீசாருக்கு...

0
திண்டுக்கல் - ஜன - 20,2022 கர்நாடக மாநிலத்திலிருந்து கடத்திவரப்பட்ட 225.300 கிலோ குட்கா பொருட்களை கைப்பற்றி இரண்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினருக்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . ஸ்ரீனிவாசன் பாராட்டு...

நெல்லையில் புதிய ஆயுதப்படை வளாகம் கட்டிட பணிகளை போலீஸ் கமிஷனர் அடிக்கல் நாட்டி...

0
திருநெல்வேலி - ஜன -19,2022 திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் சுமார் 3½ கோடி ரூபாய் மதிப்பில் 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மூன்று தளங்கள் கொண்ட புதிய திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை...

நாகையில் எஸ்‌‌‌பி தலைமையில்‌‌‌ கல்‌‌‌வி நிறுவனங்‌‌‌களில்‌‌‌ சைபர் குற்றங்கள் குறித்து ஐஜி காணொலி...

0
நாகபட்டிணம் - ஜன - 19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் நாகப்பட்டினம் சைபர் கிரைம் காவல் நிலையத்தின் சார்பில் நாகப்பட்டினம் மாவட்டம EGS பிள்ளை கல்வி நிறுவனத்தில் சைபர் க்ரைம்சம்பந்தமான விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி...

சேலத்தில் திருடுபோன 80,சவரன் நகைகள் மீட்பு தனிப்படை போலீசாருக்கு போலீஸ் கமிஷனர் பாராட்டு….

0
சேலம் - ஜன -19,2022 செய்தியாளர்‌‌‌ - முரளி சேலம் மாநகரத்தில் திருடு போன நகைகளை கண்டுபிடிக்கும் பொருட்டு சேலம் மாநகரம் காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா I.P.S உத்தரவின் பேரில்‌‌‌ வடக்‌‌‌கு...

விவசாய பிரச்சனைகளுக்கான குறைதீர் கூட்டம் மாவட்ட எஸ்பி தலைமையில் நடைபெற்றது

0
திருவாரூர் - ஜன -19,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் திருவாரூர் மாவட்ட காவல்துறை சார்பில் விவசாய பிரச்சினைகளுக்கான குறைதீர் கூட்டம் திருவாரூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்கு காவல்துறை உதவும் விதமாகவிவசாயிகள் குறைதீர் கூட்டம்...

தற்போதைய செய்திகள்