78.4 F
Tirunelveli
Wednesday, January 19, 2022
முகப்பு மாவட்டம் தர்மபுரி மனிதஉரிமை பிரிவு சார்பில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்றது

மனிதஉரிமை பிரிவு சார்பில் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு முகாம் மாவட்ட எஸ்.பி தலைமையில் நடைபெற்றது

தர்மபுரி – ஆகஸ்ட் – 08,2021

தர்‌‌‌மபுரி மாவட்‌‌‌டத்‌‌‌தில்‌‌‌ மாவட்‌‌‌ட காவல்‌‌‌துறை சார்‌‌‌பில்‌‌‌ சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்‌‌‌பில்‌‌‌ வன்‌‌‌கொடுமை தடுப்‌‌‌பு விழிப்‌‌‌புணர்‌‌‌வு முகாம்‌‌‌ மாவட்‌‌‌ட காவல்‌‌‌ கண்‌‌‌கானிப்‌‌‌பாளர்‌‌‌ கலைசெல்‌‌‌வன்‌‌‌ ஐ.பி.எஸ்‌‌‌ தலைமையில்‌‌‌ நடைபெற்‌‌‌றது காவல் துணை கண்காணிப்பாளர் .ஜெயக்குமார் முன்னிலை வகித்து வரவேற்புரை நல்கினார். மேலும் அதியமான் கோட்டை காவல் நிலைய காவல் ஆய்வாளர் .ரங்கசாமி , அதியமான்கோட்டை கிராம ஊராட்சி மன்றத் தலைவர் மங்கம்மாள் குமார் , நல்லம்பள்ளி கிராம ஊராட்சி மன்றத் தலைவர் மூர்த்தி மற்றும் தங்கவேல் மண்டி மேலாளர் குப்பன் ஆகியோர் இம்முகாமில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசும்போது வன்கொடுமை தடுப்பு சட்ட விதிகள் , மத நல்லிணக்கம், மனித நேயம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும் அவர் உரையாற்றுகையில் ஒரு குடும்பத்தின் , ஒரு கிராமத்தின் , ஒரு மாவட்டத்தின் , ஒரு மாநிலத்தின் மற்றும் ஒரு தேசத்தின் வளர்ச்சியானது அனைத்து சமூகத்தின் ஒற்றுமையில் தான் சாத்தியமாகும் எனவும் , எனவே அனைவரும் சாதி, சமய வேறுபாடு இன்றி ஒற்றுமையுடன் வாழ வலியுறுத்தினார். இம்முகாமில் ஊர் முக்கிய பிரமுகர்கள், ஊர் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முகாமில் கலந்துகொண்ட அனைவரும் கொரோனா தடுப்பு விதிகளுக்கு உட்பட்டு முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடித்தனர். இறுதியாக தருமபுரி மாவட்ட காவல்துறையின் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு புள்ளிஇயல் ஆய்வாளர் ராகுல் காந்தி அவர்கள் நன்றி உரையாற்றினார்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில்‌‌‌ வாலிபர் மீது குண்டாஸ் போலீஸ்‌‌‌ கமிஷனர் அதிரடி

0
திருநெல்வேலி - ஜன - 19,2022 கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் பல்வேறு வழக்குகளில்...

எஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் மரியாதையாக நடந்துவரும் காவலருக்கு எஸ்பி பாராட்டு

0
திருநெல்வேலி - ஜன -19,2022 புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலருக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் ஜெஸ்கர்,...

“கூடைபந்து போட்டியில் பதக்கம் வென்ற ஆயுதபடை காவலருக்கு எஸ்பி பாராட்டு…..

0
தூத்துக்குடி - ஜன -19,2022 தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த தலைமை...

“சுமார் 30,ஆயிரம்‌‌‌ மதிப்புள்ள 45,கிலோ குட்கா மற்‌‌‌றும்‌‌‌ பைக்‌‌‌ பறிமுதல் இருவர் கைது”

0
தூத்துக்குடி - ஜன -18,2022 தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருள்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த இருவர் கைது - ரூபாய் 33,500/- மதிப்புள்ள...

“இலங்கைக்கு கடத்த முயன்ற 170,கிலோ கஞ்சா பறிமுதல் 9,பேர் கைது”

0
நாகப்பட்டினம் - ஜன -18,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் சட்ட விரோதமாக கஞ்சா கடத்த முயன்ற 09 நபர்கள் கைது மற்றும் 170 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல்...

தற்போதைய செய்திகள்