100 F
Tirunelveli
Thursday, September 16, 2021
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி புதிதாக 11சி.சி.டி.வி கேமராக்‌‌‌களின்‌‌‌ இயக்‌‌‌கத்தை மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்தார்

புதிதாக 11சி.சி.டி.வி கேமராக்‌‌‌களின்‌‌‌ இயக்‌‌‌கத்தை மாவட்ட எஸ்.பி துவக்கி வைத்தார்

தூத்துக்குடி – ஆகஸ்ட் – 24,2021

தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்ப்பட்ட பகுதிகளில் புதிதாக அமைக்கப்பட்ட 11 சி.சி.டி.வி கேமராக்கள் திறப்புவிழா மற்றும் கிராம விழிப்புணர்வு கூட்டம இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் உட்கோட்டம் தருவைகுளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பலோடை, சமத்துவபுரம் மற்றும் ஏ. குமாரபுரம் ஆகிய பகுதிகளின் முக்கிய இடங்களில் ஊர் பொதுமக்கள் ஒத்துழைப்புடன் 11 சி.சி.டி.வி கேமராக்கள் புதிதாக பொருத்தப்பட்டுள்ளது. மேற்படி புதிதாக அமைக்கப்பட்ட சி.சி.டி.வி கேமராக்களை வேப்பலோடை மெயின்ரோடு பகுதியில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து வேப்பலோடை சமுதாய நலக்கூடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் கிராம விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், குற்றங்களை குறைப்பதற்கு சி.சி.டி.வி கேமரா என்பது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இந்த கேமரா பொருத்துவதன் மூலம் இரண்டு நன்மைகள். ஓன்று குற்றங்கள் நடக்காமல் தடுப்பது, மற்றொன்று நடந்த குற்றத்தை கண்டுபிடிப்பது. மேலும் கிழக்கு கடற்கரை சாலை ரோட்டில் அடிக்கடி விபத்து ஏற்படுத்தும் வாகனங்களின் எண்களை வைத்து எளிதாக கண்டறியவும் சிசிடிவி கேமராக்கள் பயன்படுகிறது. காவல்துறையில் சி.சி.டி.வி கேமரா மூலம் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்றனர். மேலும் இந்த கிராம விழிப்புணர்வு கூட்டம் கடந்த சில மாதங்களாக ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று, அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் மற்றும் இளைஞர்களிடையே ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். உங்கள் ஊரில் சிறு சிறு பிரச்சனைகள் வந்தால், அதை உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால், அதை உடனடியாக நிவர்த்தி செய்ய்படும். உங்கள் பகுதியில் உள்ளவர்கள் அனைவரும் கல்லூரி படிப்பு வரை படித்து கல்வியறிவை வளர்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெண்களும் பட்டப் படிப்பு வரை படிக்க வேண்டும். கல்வி ஒன்றுதான் வருங்காலங்களில் உங்கள் குழந்தைகளை சாதனையாளர்களாக மாற்றும். மேலும் கொரோனா பெருந்தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மூக்கை நன்றாக மூடி முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின் போது விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ், விளாத்திகுளம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் ராபி சுஜின் ஜோஸ், உதவி ஆய்வாளர் சரவணன், வேப்பலோடை பஞ்சாயத்து தலைவர் கனி, வேப்பலோடை விவசாயிகள் சங்க தலைவர் ரூஸ்வெல்ட், துணை தலைவர் சிவசாமி, வியபாரிகள் சங்க தலைவர் பாண்டி, செயலாளர் வேதரத்தினம் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

19,724FansLike
47FollowersFollow
359SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நேர்மிகு மனிதருக்கு சேலம் போலீஸ் கமிஷனர் பாராட்டு

0
சேலம் - செப் -16,2021 இருசக்கர வாகனத்தில் எடுத்துச்சென்று தவறவிட்ட 1,00,000/-ஐ காவல்துறை மூலம் உரியவரிடம் ஒப்படைத்தவர்களை சேலம் மாநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் வரவழைத்து கௌரவித்தார். 14.09.2021 ஆம் தேதி சேலம்...

“தூத்துக்குடி எஸ்.பியின் அதிரடி நடவடிக்கையால் 36,லட்‌‌‌சம்‌‌‌ மதிப்புள்ள நிலம் மீட்பு….

0
தூத்துக்குடி - செப் -15,2021 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் மூலம் மோசடி செய்த ரூபாய் 36 லட்சம் மதிப்புள்ள 6 ஏக்கர் நிலம் மீட்பு - மாவட்ட...

தூத்துக்குடியில் தடகள போட்டியை மாவட்ட எஸ்.பி ஒழிப்பிக் ஜோதியை ஏற்றி துவக்கிவைத்தார்

0
தூத்துக்குடி - செப் - 15,2021 தூத்துக்குடி மாவட்ட தடகள கழகம் சார்பாக இளையோர்களுக்கான தடகளப்போட்டியை இன்று தூத்துக்குடி தருவை விளையாட்டு மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தேசியக் கொடி ஏற்றி...

இனையதள மோசடி குறித்த விழிப்புணர்வு குறும்படத்தை கோவை எஸ்.பி வெளியிட்டார்

0
கோயம்புத்தூர் -செப்‌‌‌,14,2021 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செல்வநாகரத்தினம் இ.கா.ப.,  உத்தரவின்பேரிலும்,சைபர் கிரைம் கூடுதல் கண்காணிப்பாளர் சங்கு  வழிகாட்டுதலின் படியும், சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் . ஜெயதேவி  மற்றும் சைபர் கிரைம்...

பெண்கள்‌‌‌ மற்‌‌‌றும்‌‌‌ மாற்‌‌‌றுதிறனாளிகளுக்‌‌‌கு உதவ மாவட்‌‌‌ட எஸ்‌‌‌.பி விடியல்‌‌‌ என்‌‌‌கிற புதிய திட்‌‌‌டத்‌‌‌தை துவக்‌‌‌கினார்‌‌‌

0
கோயம்புத்தூர் - செப் - 14,2021 கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ...

தற்போதைய செய்திகள்