82.8 F
Tirunelveli
Friday, May 20, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது - டி.எஸ்.பி பொன்னரசு தலைமையிலான தனிப்படை...

கொலை வழக்கில் இரண்டு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவர் கைது – டி.எஸ்.பி பொன்னரசு தலைமையிலான தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

தூத்துக்குடி – ஆகஸ்ட் – 12,2021

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 2019 ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் 2 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த எதிரி கைது – கைது செய்த தனிப்படையினருக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வல்லநாடு நாணல்காடு பகுதியை சேர்ந்த மாரியப்பன் மகன் இசக்கிபாண்டி (22) என்பவரை முன்விரோதம் காரணமாக நாணல்காடு தாமிரபரணி ஆற்றுபாலத்தில் வைத்து 12.09.2019 அன்று அரிவாளால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இவ்வழக்கில் 16 எதிரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் இவ்வழக்கின் 2வது எதிரியான வல்லநாடு பக்கப்பட்டியைச் சேர்ந்த சுப்பையா மகன் மாரிமுத்து (26) என்பவர் மட்டும் கடந்த 2 வருடங்களாக தலைமறைவாக இருந்துவந்தார்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் கடந்த 2 வருடங்களாக தலைமறைவாக உள்ள கொலை வழக்கு எதிரியை கைது செய்ய தூத்துக்குடி ஊரக உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராஜாராபர்ட், ஜெயராமசுப்பிரமணியன், தலைமைகாவலர் சுந்தரராஜன், முதல் நிலை காவலர்கள் சதீஷ் தணிகைராஜா,. சுரேஷ்குமார் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் மேற்படி தனிப்படையினரின் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் நேற்று (11.08.2021) வல்லநாட்டிலிருந்து பக்கப்பட்டிக்கு பேரூந்தில் சென்று கொண்டிருந்த தலைமறைவாக இருந்த எதிரி மாரிமுத்து என்பவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2 வருடங்களாக தலைமறைவாக இருந்த கொலை வழக்கு எதிரியை கைது செய்த மேற்படி தனிப்படை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

19,724FansLike
84FollowersFollow
388SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

திருவாரூர் திருக்கோயில் திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு

0
திருவாரூர் - மே -20,2022 செய்தியாளர் - சோமாஸ் கந்தன் திருவாரூர் தியாகராஜர் திருக்கோவில் தெப்பத் திருவிழா முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு பணி. திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் C.விஜயகுமார்.IPS நேரில் ஆய்வு பாதுகாப்பு...

கரூர்‌ மாவட்டத்தில் காணாமல் மற்றும் திருடு போன செல்போன்களை மீட்‌‌‌டு மாவட்ட எஸ்பி...

0
கரூர் - மே -20,2022 கரூர் மாவட்டத்தில் காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்த சைபர் கிரைம் காவல்துறையினர் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் தலைமையில் மாவட்ட காவல் அலுவலகத்தில்...

தூத்துக்குடியில்‌‌‌ எஸ்பி தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி ஏற்பு

0
தூத்துக்குடி -மே -20,2022 ‘கொடுஞ்செயல் எதிர்ப்பு” நாளை முன்னிட்டு இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் தலைமையில் உறுதிமொழி. ஒவ்வொரு ஆண்டும் மே...

நெல்லையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி போலீஸ் கமிஷனர் தலைமையில்...

0
நெல்லை மாநகரம் -மே - 20,2022 நெல்லை மாநகர காவல் ஆணையாளர் .சந்தோஷ் குமார் இ.கா.ப தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள்...

விழுப்புரத்தில் காவல் உதவி செயலி விழிப்புணர்வு ஸ்‌‌‌டிக்‌‌‌கர்‌‌‌ ஒட்‌‌‌டும்‌‌‌ நிகழ்ச்சியில் அமைச்சர்,ஆட்சியர், மாவட்ட...

0
விழுப்புரம் -மே - 19,2022 தமிழக காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழுந்தைகள், பொதுமக்கள் பாதுகாப்பிற்காகக் காவல்துறையை உடனடியாக தொடர்புக்கொள்ள தங்கள் கைபேசியில் "KAVAL UTHAVI APP": (செயலியை) பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் காவல்துறை...

தற்போதைய செய்திகள்