தென்காசி – ஆகஸ்ட்-14,2021
தென்காசி மாவட்டம், காவல்துறையில் ஓர் காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்த நபர்களுக்கு பொது பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு செய்யப்படும் பணியிட மாற்றத்தின் காரணத்தால் பல காவலர்கள் அவர்களது குடும்பத்தை பிரிந்து தொலைவில் உள்ள காவல் நிலையத்திற்கு பணிபுரியும் சூழ்நிலை ஏற்படுகிறது. காவலர்களின் இந்நிலையை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தென்காசி மாவட்டத்தில் முதல்முறையாக பணியிட மாற்றம் செய்யப்பட உள்ள காவல் ஆளிநர்கள் மற்றும் அதிகாரிகளை இலத்தூரில் உள்ள பாரத் பெண்கள் கல்வியியல் கல்லூரிக்கு வரவழைத்து அவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் விருப்பப்படும் காவல் நிலையம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் இச்செயலுக்கு காவலர்கள் அவர்களது மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.