திண்டுக்கல் – ஆகஸ்ட் -01,2021
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினருக்கு 24 இருசக்கர வாகனங்கள், 24 மடிக்கணினிகள் மற்றும் காவல்துறையினருக்கு பயிற்சி வகுப்பினை திண்டுக்கல் சரக காவல் துணைத் தலைவர் விஜயகுமாரி இ.கா.ப மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா இ.கா.ப துவக்கி வைத்தார்
01.08.2021 திண்டுக்கல் மாவட்டம் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் உள்ள பழனி மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் திருமதி.விஜயகுமாரி இ.கா.ப அவர்கள் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளி ப்ரியா இ.கா.ப இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் விதமாக காவல்துறையினருக்கு 24 இருசக்கர வாகனங்கள், 24 மடிக்கணினிகள் மற்றும் ஒருநாள் பயிற்சி வகுப்பினை துவக்கி வைத்தார்கள்.
கிராமப்புறங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்றங்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், குழந்தை திருமணங்களை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், காவல்துறையினர் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களிடம் இது சம்பந்தமான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வழிமுறைகள் குறித்தும் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் விஜயகுமாரி இ.கா.ப அறிவுரை கூறினார் மேலும் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட இருசக்கர வாகனங்களை கொடியசைத்து துவக்கி வைத்தார்