திருநெல்வேலி – ஆகஸ்ட்-22,2021
நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு, பாளைங்கோட்டை தெற்கு பஜார் அருகே வீரன் அழகுமுத்துக்கோன் சிலைக்கு பின்புறம் உள்ள கட்டிடத்திற்கு மாற்றப்பட்டு புதிய பொலிவுடன் இன்று முதல் செயல்பட தொடங்கியது. மேற்படி காவல் நிலையத்தை காவல் ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப அவர்கள் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றிவைத்து துவக்கிவைத்தார். மேலும் காவல் நிலைய பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்கள். இந்நிகழ்ச்சியில் காவல் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் சுரேஷ்குமார் சட்டம் மற்றும் ஒழுங்குசுரேஷ்குமார் குற்றம் மற்றும் போக்குவரத்து , டவுன் குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையாளர் அண்ணாத்துரை நுண்ணறிவு பிரிவு ஆய்வாளர் ரமேஷ்கண்ணன் அவர்கள், போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆய்வாளர் பொறுப்பு அன்னலெட்சுமி மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.