திருவாரூர் – ஆகஸ்ட் -05,2021
திருத்துறைப்பூண்டி காவல்சரகம் ஆதிரெங்கம் கிராமத்தில் வாழ்ந்த இயற்கை விவசாயி நெல்.ஜெயராமன் பாரம்பரிய நெல் வகைகளை மீட்டெடுக்கும் வகையில் பண்ணை அமைத்து விவசாயம் செய்துவந்தார்
நெல் ஜெயராமன் தனது முயற்சியில் திருத்துறைப்பூண்டி பகுதியில்
ஆதிரெங்கம் விவசாயி நெல்.ஜெயராமன் நெல் பாதுகாப்பு மையம் அமைத்து அதன் சார்பில் ஒவ்வொரு வருடமும் தேசிய நெல் திருவிழா நடைபெற்றுவருகிறது.
மேற்படி தேசிய நெல் திருவிழா நிகழ்ச்சி இன்று திருத்துறைப்பூண்டி ARV திருமண மண்டபத்தில் நடைபெற்றநிலையில் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினர்களாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர்பாலகிருஷ்ணன் IPS., அவர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் IPS., கலந்துகொண்டு பாரம்பரிய நெல் வகைகளை பார்வையிட்டு விவசாயிகளை சந்தித்து பேசி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை தெரிவித்தார்