திண்டுக்கல் – ஆகஸ்ட் – 27,2021
புகையிலைப் பொருட்களை ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அதிரடி நடவடிக்கை.
திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருட்களை ஒழிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவின்படி மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அம்பாத்துரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை காவல்நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கோவிந்தசாமி தலைமையில் காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது, இதையடுத்து காரில் வந்த மூன்று நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 257 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் கார் பறிமுதல் செய்தனர்.
மேலும் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த அம்பாத்துரை காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் கோவிந்தசாமி மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் நேரில் சந்தித்து அவர்களுக்கு பண வெகுமதியும், சான்றிதழ்களும் வழங்கி பாராட்டினார்