தேனி – ஆகஸ்ட் -22,2021
செய்தியாளர் – செல்வக்குமார்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கள்ளிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவில்வசித்து வருபவர் 26 வயதுள்ள சத்யா இவருடைய கணவர் ரஞ்சித்குமார்சிங் இவர்களுக்கு திருமணம் ஆகி 8 மாத பெண் குழந்தை உள்ளது
இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது நேற்று முன்தினம் 19- 8 – 2021 தேதிஇரவு இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது ..
வாய்த் தகராறு முற்றி சத்யா தன்னுடைய கணவரான ரஞ்சித் குமார்சிங்ன் கழுத்தில் கயிற்றால் இறுக்கி கொலை செய்துள்ளார் கொலையை மறைத்து சத்யா தனது கணவர் இறந்து விட்டதாக கூறி உள்ளார்
இச்சம்பவம் தொடர்பாக ரஞ்சித்சிங்கின் தந்தை தென்கரை காவல் நிலையத்தில் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக புகார் செய்துள்ளார் அதனடிப்படையில் அன்றே சந்தேகத்தின் பெயரில் சத்யாவை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்து விசாரணை வளையத்தில் வைத்துள்ளார்கள் பின்பு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உடற்கூறு ஆய்வில் கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டதால் கொலை செய்த சத்யாவை இன்று தென்கரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
மனைவியே கணவரை கொலை செய்த சம்பவம் பெரியகுளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது