திண்டுக்கல் -ஆகஸ்ட் -14,2021
குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு கைது செய்த காவல் துறையினரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கிய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன்
காவல்நிலையத்தில் வழக்குபதிவு:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை, வத்தலகுண்டு, பட்டிவீரன்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மூன்று மாதத்திற்கு முன்பு நடந்து சென்ற பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் பூட்டியிருந்த வீட்டை உடைத்து மர்ம நபர்கள் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதுதொடர்பாக காவல் நிலையங்களில் வழக்குகள் செய்யப்பட்டது.
தனிப்படை விசாரனை:
இந்நிலையில் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் உத்தரவுப்படி நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகன் மேற்பார்வையில் சார்பு ஆய்வாளர் .கண்ணா காந்தி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.
நகைகள் பறிமுதல்:
இந்நிலையில் பட்டிவீரன்பட்டி ஆனா பிரிவு அருகே வாகன தணிக்கையின் போது சந்தேகத்தின் படி இருசக்கர வாகனத்தில் வந்த முத்துலாபுரம் பகுதியைச் சேர்ந்த சங்கிலி மற்றும் சேடப்பட்டி பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (எ) ரஞ்சித் என்பவர்களை பிடித்து விசாரணை செய்ததில் பெண்களிடம் நகை பறிப்பு மற்றும் நிலக்கோட்டை பகுதியில் பூட்டிய வீட்டை உடைத்து நகைகளை கொள்ளையடித்தது தாங்கள் தான் என ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து 02 நபர்களையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 24 சவரன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
மாவட்ட எஸ்.பி பாராட்டு:
இதனையறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த சார்பு ஆய்வாளர் கண்ணா காந்தி அவர்கள் தலைமையிலான தனிப்படை போலீசாரை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்