கோயம்புத்தூர் – ஆகஸ்ட் – 06,2021
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் முனைவர். சைலேந்திர பாபு, இ.கா.ப., கோவை மாநகரம், திருப்பூர் மாநகரம் மற்றும் கோவை மண்டலம் காவல் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு கலந்துரையாடல் நடத்தினார். கோவை மண்டலம் மற்றும் மாநகர பகுதிகளில் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்தும் விதமாகவும், குற்றச் சம்பவங்களை குறைக்கும் விதமாகவும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பிற்காகவும், காவல்துறை மற்றும் பொதுமக்களின் நல்லுறவுகளை மேம்படுத்தும் விதமாகவும் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை குறித்து கேட்டறிந்தார்.
காவல்துறையில் காவலர்களின் பணிச்சுமையை குறைக்கும் விதமாகவும் அவர்கள் குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடும் வகையில் வாராந்திர ஓய்வும், பிறந்தநாள் மற்றும் திருமண நாட்களில் விடுமுறையும் வழங்கப்பட்டு வருவதை கேட்டறிந்தார். கோவை மாநகரில் சிறப்பாக புலனாய்வு செய்த 10 குழுவினருக்கு ரொக்கப்பரிசு வழங்கி பாராட்டினார்.