திருநெல்வேலி – ஆகஸ்ட் – 17,2021
நெல்லை மாநகரம் டவுன் மற்றும் தச்சநல்லூர் பகுதியில், நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் தனிப்படை போலீசாரின் அதிரடி வேட்டையில் ரூ 45,408/- மதிப்புடைய 2052 புகையிலை பொட்டலங்கள் பறிமுதல்.
திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப உத்தரவின் பேரில்,நெல்லை மாநகர சட்டம் ஒழுங்கு காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையின் கீழ் இயங்கிவரும் தனிப்படை போலீசார் 16-08-2021 ம் தேதியன்று, நடத்திய அதிரடி வேட்டையில் நெல்லை மாநகரம் டவுன் பகுதியில் ரூ 27,408/- மதிப்புடைய 152 பொட்டலங்களும், தச்சநல்லூர் பகுதியில் ரூ 18,000/- மதிப்புடைய 1900 பொட்டலங்களும் மொத்தம் ரூ 45,408/- மதிப்புடைய 2052 புகையிலை பொட்டலங்கள் பறிமுதல் செய்து, புகையிலை பொட்டலங்கள் பதுக்கி வைத்திருந்த எதிரிகளான டவுன் பாரதியார் தெருவை சேர்ந்த கணேசன்,டவுன் வயல் தெருவை சேர்ந்த மணிஷ்குமார் ஆகிய இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தார்கள். மேலும் தப்பியோடிய நபர்களை தேடிவருகிறார்கள்.