78.4 F
Tirunelveli
Wednesday, January 19, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி "மாவட்ட எஸ்.பி தலைமையில் வணிக சங்க கூட்டமைப்பு சார்பில் கொரனா விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது....

“மாவட்ட எஸ்.பி தலைமையில் வணிக சங்க கூட்டமைப்பு சார்பில் கொரனா விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது….

தூத்துக்குடி – ஆகஸ்‌‌‌ட் -06,2021

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்டம் சார்பாக கொரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் இன்று பிரையன்ட் நகர் மாடசாமி யாதவ் பத்திர காளியம்மாள் திருமண மஹாலில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று (06.08.2021) தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்டம் சார்பாக தூத்துக்குடி பிரையன்ட்நகர் மாடசாமி யாதவ் பத்திர காளியம்;மாள் திருமண மஹாலில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார்‌‌‌ தலைமையில் கொரோனா விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு சானிடைசர், முககவசங்கள், கபசுரகுடிநீர், துண்டுபிரசுரங்கள் வழங்கியதுடன், பொதுமக்கள் முக கவசம் அணிவதை வலியுறுத்தி அருகிலுள்ள கடைகளில் ‘முக கவசம் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பொருட்கள் கொடுக்கப்படும்” என்னும் வாசகங்கள் அடங்கிய பதாகைகளை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 3ம் அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்;சிகள் கடந்த 5 நாட்களாக அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பரவி வரும் 3ம் அலை கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வருமுன் காப்போம் என்ற நோக்கத்தில் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு காவல்துறை சார்பாக ஏற்படுத்தி வருகிறோம். அதன்படி வியாபாரிகளுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இன்று விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலகட்டங்களில் தொழிலாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சிரமமாக இருக்கும். அரசு தற்போது ஊரடங்கு தளர்வு அறிவித்திருந்த நிலையில் பொதுமக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வியாபாரிகள் தங்கள் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை முககவசம் அணிந்து வரச் சொல்லுதல், சமூக இடைவெளியை கடைபிடிக்கச் செய்தல் போன்ற விழிப்புணர்வு அடங்கிய பதாகைகள் வைத்து வாடிக்கையாளர்களை கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும். மேலும் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின் படி 50% வாடிக்கையாளர்களை அனுமதிப்பது போன்ற விதிமுறைகளை வியாபாரிகள் கடைபிடிக்க வேண்டும்.

மேலும் பொதுமக்கள் முக்கவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில துணை தலைவர் வெற்றி ராஜன் தலைமையில் உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் திரு. கணேஷ், தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஆனந்தராஜன் உதவி ஆய்வாளர் திரு. முத்துகணேஷ், தனிப்பிரிவு காவலர் ஆனந்த கிருஷ்ணகுமார் உட்பட காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மாவட்ட பொருப்பாளர்கள் ஞானசெல்வம், ரமேஷ் உட்பட பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில்‌‌‌ வாலிபர் மீது குண்டாஸ் போலீஸ்‌‌‌ கமிஷனர் அதிரடி

0
திருநெல்வேலி - ஜன - 19,2022 கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் பல்வேறு வழக்குகளில்...

எஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் மரியாதையாக நடந்துவரும் காவலருக்கு எஸ்பி பாராட்டு

0
திருநெல்வேலி - ஜன -19,2022 புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலருக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் ஜெஸ்கர்,...

“கூடைபந்து போட்டியில் பதக்கம் வென்ற ஆயுதபடை காவலருக்கு எஸ்பி பாராட்டு…..

0
தூத்துக்குடி - ஜன -19,2022 தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த தலைமை...

“சுமார் 30,ஆயிரம்‌‌‌ மதிப்புள்ள 45,கிலோ குட்கா மற்‌‌‌றும்‌‌‌ பைக்‌‌‌ பறிமுதல் இருவர் கைது”

0
தூத்துக்குடி - ஜன -18,2022 தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருள்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த இருவர் கைது - ரூபாய் 33,500/- மதிப்புள்ள...

“இலங்கைக்கு கடத்த முயன்ற 170,கிலோ கஞ்சா பறிமுதல் 9,பேர் கைது”

0
நாகப்பட்டினம் - ஜன -18,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் சட்ட விரோதமாக கஞ்சா கடத்த முயன்ற 09 நபர்கள் கைது மற்றும் 170 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல்...

தற்போதைய செய்திகள்