திருநெல்வேலி – ஆகஸ்ட் – 25,2021
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய நேரடி உதவி ஆய்வாளர் தேர்வில்
திருநெல்வேலி மாநகர பகுதியை சேர்ந்த 16 நபர்கள் நேரடி காவல் உதவி ஆய்வாளர்களாக தேர்வு
செய்யப்பட்டுள்ளனர். தேர்வான 16 நபர்களையும், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப இன்று நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்திற்க்கு நேரில் அழைத்து, சிறப்புடன் பணியாற்ற அறிவுரைகள் வழங்கி பணிநியமன ஆணையை அனைவருக்கும் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்