75.8 F
Tirunelveli
Wednesday, December 7, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

சீனா அதிபரை வியப்பில் ஆழ்த்திய தமிழக காவல்துறை அதிகாரி

திருநெல்வேலி – ஆகஸ்ட் – 03,2021

6 அடி உயரம், அகன்ற தோள் புஜம், அடர்ந்த முறுக்கு மீசை, சிரித்த முகம், துருதுரு பார்வை, மிடுக்கான தோற்றம், பேச்சில்‌‌ பணிவு, கம்பீரம் கலந்த கணீர் குரல்… ஒரு காக்கி அதிகாரிக்குறிய அத்தனை தகுதிகளும் ஒரு சேர்ந்த அவர் வேறு யாருமல்ல சீன அதிபர் சென்னைக்கு விசிட் வந்த போது சிறப்பான பாதுகாப்பு பணிக்காக அவரிடம் தனிப்பட்ட முறையில் கைகுலுக்கு பெற்று பாராட்டு பெற்ற நம்ம திருநெல்வேலி மாநகர போலீஸ் துணைக்கமிஷனர் சுரேஷ்குமார்தான் அவர்.

45 வயது நிறைந்த சுரேஷ்குமாரைப் பற்றி நெல்லை மாநகர மக்கள் ஏற்கனவே அறிந்திருந்தாலும் அவரைப் பற்றி நமது போலீஸ் மீடியா சார்பில் அவர் தொடர்பான ஒரு அலசலை இங்கே. பார்ப்போம். சுரேஷ்குமார் யார் என்று நீங்களும் தெரிந்து கொள்ளலாமே….

சுரேஷ்குமார் பிறந்த ஊர் சேலம் மாவட்டம். அங்கு ‌சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவர். கான்வென்டில் பள்ளிப்படிப்பு. இவரது தந்தையும் காவல்துறையில் அதிகாரியாக பணிபுரிந்தவர். பிஇ மற்றும் எம்பிஏ பட்டதாரி. 1976ம் ஆண்டு நவம்பர் மாதம் 6ம் தேதி பிறந்தவர். தமிழ்‌‌‌, ஆங்கிலம்‌‌‌, இந்தி‌‌ ஆகிய‌ மூன்று மொழிகளில் புலமை பெற்றவர். அமெரிக்‌‌‌கன், லண்‌‌‌டன்‌‌‌ ஸ்‌‌‌டைலில் இவரது நுனி நடனமாடும் ஆங்கிலம் இதுதான் இவரது அறிமுக தகவல்கள். இனி அவரது காவல்பணி பற்றிய தகவல்களை பார்ப்போம்…..

ஸ்கேனிங் கண்கள்

சுரேஷ்குமாரை சந்திக்க வந்திருப்பவர் எப்படிப்பட்டவர் என்பதை அவரது பேச்சு, நடை உடை பாவணையை வைத்தே எடை போடும் இவரது ஸ்கேனிங் கண்கள் காவல்துறை அதிகாரிக்குறிய தனித்திறமை. அது மட்டுமின்றி காவல்துறை தொடர்பான பைல்கள் மற்றும் குற்றப்புலனாய்வில் நொடிப்பொழுதில் அலசி ஆராய்ந்து அவற்றை முடித்து வைப்பதில் வல்லவர். விசாரணையின் மூலம் புகாரின் உண்மைத்தன்மையை அறிந்து விடுவார். சுரேஷ்குமார் நெல்லையின் சட்டம் ஒழுங்கு துணைக்கமிஷனராக பொறுப்பேற்ற நாளில் இருந்தே அவரது அதிரடி நடவடிக்கைகள் தொடர்கின்றன.

தனி உளவுப்பிரிவு மூலம் சல்லடை

நெல்லை மாநகரத்துக்கு சுரேஷ்குமார் புதியவர் அல்ல. ஏற்கனவே ஒரு முறை அந்த பதவியை அலங்கரித்தவர்தான். இன்று இளைய தலைமுறையை சீரழிக்கும் கஞ்சா, லாட்டரி குட்கா, சூதாட்டம் போன்ற சட்டவிரோத செயல்களை தனது அதிரடி நடவடிக்கையால் தற்போது கட்டுக்குள் வைத்துள்ளார் சுரேஷ்குமார். தனது உளவுப்படை மூலம் நெல்லை மாநகரை சல்லடை போட்டு அலசும் சுரேஷ்குமார் தனது தனிப்படையின் மூலம் அவர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு அதிரடி காட்டுகிறார். சுரேஷ்குமாரின் இந்த நேரடி கண்காணிப்பால் நெல்லையில் முன்பை விட கணிசமாக குற்றச்செயல்கள் குறைந்து வருகின்றது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். சுரேஷ்குமாரின் காவல் பணியில் இதுவும் ஒரு தனி அத்தியாயம்தான்.

திடீர் விசிட் மூலம் அதிரடி

அதாவது, காவல்‌‌‌நிலையங்களுக்கு அவர் ரகசியமாக திடீர் விசிட்‌‌‌ அடித்து அங்கு இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோரின் செயல்பாடுகளை ஆய்வு செய்வார். அங்குள்ள குறைபாடுகளை அப்போதே சரி செய்து தனது அறிவுரையையும், ஆலோசனையையும் வழங்கி விட்டு வருவார். தவறு செய்யும் இன்ஸ்பெக்டர்களை கண்டித்து அவர்களையும் தன்னைப்போல பணி செய்ய வைத்து விடுவார். தனது ஸ்டேஷன் விசிட்டை யாரிடமும் சொல்லாமல் ரகசியமாகவே வைத்திருப்பார். அவரது காரோட்டிக்கு கூட டிசி எங்கே செல்கிறார் என தெரியாது. அதனால் டிசி எப்போது வேண்டுமானாலும் வருவார் எல்லாரும் அலர்ட்டாக இருங்கப்பா என்று காவலர் முதல் இன்ஸ் வரை தங்கள் பணியில் எந்த தொய்வும் இன்றி செய்து முடித்து வைப்பார்களாம்.

ஜாங்கிட் போல

புகார் அளிக்‌‌‌க வரும் பொதுமக்களிடம் அவர்‌‌‌களின்‌‌‌ புகார்களை கனிவுடன் கேட்டு‌‌, அவர்‌‌‌கள்‌‌‌ முன்பாகவே சம்‌‌‌பந்‌‌‌தபட்‌‌‌ட இன்‌‌‌ஸ்‌‌‌பெக்‌‌‌டருக்‌‌‌கு புகாரின்‌‌‌ தன்‌‌‌மை குறித்தும்‌‌‌ மேற்கொள்‌‌‌ள வேண்‌‌‌டிய நடவடிக்‌‌‌கைகள்‌‌‌ குறித்‌‌‌தும்‌‌‌ அறிவுரை வழங்‌‌‌கி நியாமான முறையில்‌‌‌ நடவடிக்கை எடுக்‌‌‌குமாறு உத்தரவிடுவார். இது போன்‌‌‌ற சுரேஷ்குமாரின் இவரது செயல்பாடுகள் முன்னாள் டிஜிபிக்கள் ஜாங்கிட், தேவாரம், லத்திகா சரண் ஆகியோரை நினைவூட்டுகிறது. ஜாங்கிட் தூத்துக்குடி எஸ்பியாகவும், நெல்லை போலீஸ் கமிஷனராகவும் இருந்த போது பொதுமக்களின் குறைகளை அவ்வப்போது உடனடியாக தீர்த்து வைத்து சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டுவார். இதனால் இன்றும் ஜாங்கிட்டின் பெயர் தூத்துக்குடியில் புகழுடன் விளங்குகிறது.

மகாத்மா காந்தி விருது

2000 ஆம் ஆண்டு குரூப்ஒன் தேர்வில் வெற்றி பெற்று டிஎஸ்பி ஆன சுரேஷ்குமார் 2003ம் ஆண்டு நெல்லை நாங்குநேரியில் டிஎஸ்பியாக கால்பதித்து காவல் பணியை தொடங்கினார். அங்கு நீண்ட காலம் பணிபுரிந்த பின்பு சேலம் மாவட்ட குற்ற ஆவணக்காப்பகத்துக்கு மாற்றப்பட்டார். சுரேஷ்குமாரின் சீரிய பணி 2010ஆம் ஆண்‌‌‌டு அவருக்கு நாமக்கல் மாவட்ட ஏடிஎஸ்பியாக பதவி உயர்வு தேடி வந்தது. 2012 வரை அங்கு முத்திரைப் பதித்த பின்பு ஈரோடு மாவட்ட மதுவிலக்‌‌‌கு அமல் பிரிவு ஏ.டி.எஸ்‌‌‌.பியாக மாற்றல் ஆனார். அங்கு ‌‌போலி மதுபான ஆலையை கண்‌டறிந்‌‌‌து அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார். அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்த 16 ஆயிரம் லிட்‌‌‌டர்‌‌‌ மதுபானம் அழிக்கப்பட்டது. அதற்‌‌‌காக அன்‌‌‌றைய முதல்‌‌‌வர்‌ ஜெயலலிதாவிடம்‌‌‌ மகாத்மா காந்‌‌தி விருது இவருக்கு வழங்கப்பட்டது.
பின்பு 2013ம் ஆண்டு எஸ்‌பியாக பதவி உயர்‌‌‌வு பெற்‌‌‌று திருநெல்‌‌‌வேலி மாநகர துணைக் கமிஷனராக பதவி வகித்தார். அப்போது நெல்லையில் நடைபெற்‌‌‌ற மத ஊர்‌‌‌வலத்தில் வன்‌‌‌முறை ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர் கெட்டது. அதனை தனது நுண்ணிய அறிவால் நெல்லை மாநகர போலீஸ் படையை கொண்டு லாவகமாக ஒடுக்கி அமைதியை நிலைநாட்டினார். இது அப்போதை முதல்வர் ஜெயலலிதா வரை சென்று அவரது குட்புக்கில் சுரேஷ்குமாரை இடம்பெறச் செய்தது.

சீன பிரதமரிடம் பாராட்டு

பின்பு சென்‌‌‌னை நகரின் பதட்டம் நிறைந்த பகுதிகளில் ஒன்றான வண்‌‌‌ணாரப்பேட்டை துணைக்கமிஷனராக அவருக்கு பதவி வழங்கப்பட்டது.‌‌‌ அப்‌‌‌போது சென்‌‌‌னையில் ஏற்பட்ட பெருவெள்‌‌‌ளத்‌‌‌தில்‌‌‌ சிக்‌கிய பொதுமக்களை மீட்கும் பணியை திறம்‌‌‌பட கையான்‌‌‌டார். பின்பு ‌‌ 2015ம் தமிழக சிறப்பு (SBCID) சிறப்பு பிரிவு சிஐடி எஸ்‌.பியாக 2021ம் ஆண்டு வரை 6 ஆண்டுகள் பணிபுரிந்தார். இந்த 6 ஆண்டுகளில் அதிமுக்கிய வி.ஐ.பிக்‌‌‌களான குடியரசு தலைவர்‌‌‌கள்‌‌‌ பிரனாப்‌‌‌ முகர்‌‌‌ஜி, ராம்‌‌‌நாத்‌‌‌ கோவிந்‌‌‌த்,‌‌‌ பிரதமர்‌‌‌ மோடி வரை அனைத்து பாதுகாப்புப் பணிகளிலும் சுரேஷ்குமாரின் கான்வாய் பாதுகாப்புப் பணி அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. குறிப்பிடும் படியாக ‌சீன அதிபர் ஜிஜின்பிங் சென்னைக்கு வருகை தந்த போது‌ சுரேஷ்குமாரை அருகில் அழைத்து ‘வெல்டன், எக்சலண்ட் செக்யூரிட்டி’ என சீன பிரதமர் பாராட்டியதும் எந்த தமிழக காவல் அதிகாரிக்கும் கிடைக்காத தனிப்பெருமை எனலாம்.

தகைசால் தமிழர்

இத்தனை பெருமைக்குறிய சுரேஷ்குமார் என்றும் எளிமையைக் கடைபிடிப்பவர். விடுமுறையில் சேலத்துக்கு சென்றால் முழு விவசாயியாக மாறிவிடுவாராம். தனது நிலத்தில் விளைந்த அரிசியைத்தான் தனது உணவு தேவைக்கு பயன்படுத்தி வருகிறார். மண்ணை நேசிப்பவர்களால்தான் மக்களை நேசிக்க முடியும் என்ற உழவர்கள் மொழிக்கேற்ப தமிழக காவல்துறை அதிகாரி சுரேஷ்குமார் வாழ்ந்து வருவது அவரது தமிழ்ப்பற்றை பறை சாட்டுகிறது எனலாம். தகைசால் தமிழன் என்ற தமிழ் விருதுக்கு சுரேஷ்குமார் பொருத்தமானவர்தான் என்பதிலும் ஐயமில்லை.

– காவல் நேசன் –

: விவசாயத்தின் மீது மிகுந்த ஆர்வம். பெற்றோரின் உதவியை நாடாமல் 14 வயதிலிருந்தே உழைப்பை நம்பும் உன்னத மனிதராக இருந்துள்ளார். சிறுசிறு வியாபாரங்கள் செய்து அதிலிருந்‌‌‌து வரும்‌‌‌ வருமானத்‌‌‌தை வைத்‌‌‌து கொண்‌‌ தனது தேவைக‌ளை நிறைவேற்றுவாராம். .

: தனது தந்தைக்கு காவல்துறை மூலம் சமூகத்தில் கிடைத்த மரியாதை, கண்ணியத்தை கண்டு தானும் காவல்துறைக்கு வரவேண்டும் என்ற எண்ணமே அவரை காவல்துறைக்கு இழுத்து வந்துள்ளது.

19,724FansLike
125FollowersFollow
394SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தென்காசி மாவட்டத்திற்கு முதல்வர் வருவதால் தென்மண்டல ஐஜி நேரில் ஆய்வு

0
தென்காசி - டிச -06,2022 Newz - webteam தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வரின்‌‌‌ வருகையை ஒட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்களுடன் தென்மண்டல காவல்துறை தலைவர் அவர்கள்...

போதையில்லா திருச்சியை உருவாக்க போலீஸ் கமிஷனர் தலைமையில் விழிப்புணர்வு மாரத்தான்‌‌‌ போட்டி….

0
திருச்சி - டிச -05,2022 Newz - webteam "போதைமில்லா திருச்சி மாநகரை உருவாக்க" மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகர காவல்துறை மற்றும் மொராய்சிட்டி இணைந்‌‌‌து நடத்‌‌‌தும்‌‌‌ மாரத்தான் ஓட்டம் திருச்சி...

போக்சோ வழக்கில் இனி கைது செய்ய கூடாது போலீஸ் கமிஷனர் எஸ்பிக்களுக்கு தமிழக டிஜிபி...

0
சென்னை - டிச -05,2022 Newz - webteam போக்சோ வழக்குகளில் கைது மற்றும் புலனாய்வு தொடர்பான சுற்றறிக்கை. உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக் குழு மற்றும் போக்சோ குழுவினர் போக்சோ சட்டத்தினை குழந்தைகளுக்கெதிரான பாலியல்...

நெல்லை தூத்துக்குடி குமரி மாவட்ட எஸ்பிக்களுடன் தென் மண்டல ஐஜி ஆலோசனை

0
திருநெல்வேலி - டிச -05,2022 Newz - webteam திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் உயர் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தனிப்படை காவலர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்திய தென் மண்டல காவல்துறை...

தென்காசி எஸ்பி அலுவலகத்தில் நெல்லை சரக டிஐஜி ஆய்வு

0
தென்காசி - டிச -02,2022 Newz - webteam தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல்துறைத் துணைத் தலைவர் இன்று ஆய்வு மேற்கொண்டார் தென்காசி மாவட்டத்திற்கு தமிழக முதல்வர் அவர்களின் வருகையை ஒட்டி பாதுகாப்பு...

தற்போதைய செய்திகள்