தென்காசி – ஆகஸ்ட் – 24,2021
தென்காசி மாவட்டம்,புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நெல்கட்டும் செவலில் பூலித்தேவன் அவர்களின் பிறந்தநாளை (01.09.2021) முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.இதன் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டார். துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் புளியங்குடி காவல் ஆய்வாளர் ராஜாராம் தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் ஶ்ரீ தாமரை விஷ்ணு ஆகியோர் உடன் இருந்தனர்.