கன்னியாகுமரி – ஆகஸ்ட் – 06,2021
கன்னியாகுமரி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில் பறக்கை பகுதியில் மத நல்லிணக்கம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . வெ. பத்ரிநாராயணன் IPS கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் அவர் பேசும் போது காவல் துறையினர் சிறப்பாக செயல்பட்டு போதை பொருட்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என்றும், பொதுமக்கள் நலனில் அக்கறை கொண்டு மாவட்ட காவல்துறை செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி உட் கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா பறக்கை பஞ்சாயத்து தலைவர் கோசலை மற்றும் காவல் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.