திண்டுக்கல் – ஆகஸ்ட் -23,2021
திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் இன்று மாவட்ட ஆயுதப்படையில் உள்ள பழனி மஹாலில் காவலர் குடும்பங்களுக்கு கொரோனா தடுப்பு பற்றிய விழிப்புணர்வு வழங்கி இரண்டாம் கட்ட தடுப்பூசி முகாமை துவக்கி வைத்தார்
மேலும் முகாமில் பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் உடல்நலம், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மனபலம் ஆகியவை குறித்து காவலர்களுக்கும், காவலர் குடும்பங்களுக்கும் அறிவுரை வழங்கினார்