சென்னை – ஆகஸ்ட்-08,2021
காவல் ஆணையாளர் சங்கர் ஜுவால் இ.கா.ப மற்றும் கூடுதல் ஆணையாளர் (தெற்கு) கண்ணன் இ.கா.ப, ஆகியோரின் உத்திரவின் பேரில் கிழக்கு மண்டல இணை ஆணையாளர் ராஜேந்திரன் இ.கா.ப. திருவல்லிக்கேணி மாவட்ட துணை ஆணையாளர் பகலவன் இ.கா.ப. ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் நுங்கம்பாக்கம் சரக உதவி ஆணையாளர் ரவி அபிராம் அவர்களின் வழிகாட்டுதலில், சூளைமேடு காவல்நிலைய ஆய்வாளர் வெற்றிச்செல்வன் தலைமையில் உதவி ஆய்வாளர் முரளி, சிறப்பு உதவி ஆய்வாளர்கள் பிரகாசம், கிருஷ்ணகுமார், தலைமை காவலர் தேவராஜ், மற்றும் தங்கபாண்டியன், ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் விதத்தில் சூளைமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் சோதனை செய்து கொண்டிருந்த போது அண்ணாநெடும்பாதை, காந்தி ரோடு சந்திக்கும் இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக இரு சக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்த சென்னை கோயம்பேடு தெற்கு மாட தெரு, எண்-38ஐ சேர்ந்த முஸ்தாக் அகமது ஆ/வ 22, த/பெ ஜாகீர் ஹுசைன், மற்றும் முகம்மது ஹுசைன் ஆ/வ 22, தெ/பெ அஜீஸ் அலி, ஆகியோரை விசாரணை செய்ய மேற்படி நபர்கள் விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்த தமிழக அரசால் 72 கிலோ தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் ரூபாய்-2,50,000/- மதிப்புள்ள சுமார் கிலோகிராம் எடை கொண்ட குட்கா பொருட்களை கைப்பற்றி எதிரிகள் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தனிப்படையினரை காவல் உயரதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்