தூத்துக்குடி – ஆகஸ்ட் – 07,2021
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக கொரோனா பெருந்தொற்று 3வது அலை பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு வாரத்தின் 7ம் நாள் நிகழ்ச்சி மற்றும் கொரோனா விழிப்புணர்வு ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளிகுழந்தைகளுக்கு பரிசளிக்கும் விழா இன்று விளாத்திகுளம் அக்கமாள் திருமண மஹாலில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
கொரோனா 3ம் அலை பரவலை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு ஆகஸ்ட் 1ம் தேதியில் இருந்து 7ம் தேதி வரை கொரோனா பெருந்தொற்று விழிப்புணர்வு வாரமாக அறிவித்துள்ளது. அதன்படி இன்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பாக விளாத்திகுளம் To மதுரை மெயின்ரோடு பகுதியில் உள்ள அக்கம்மாள் திருமண மஹாலில் வைத்து கொரோனா நோய் பரவல் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பொதுமக்களிடம் கொரோனா பெருந்தொற்று குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி, கட்டுரைபோட்டி மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றிபெற்ற பள்ளி குழந்தைகளுக்கு பரிசு வழங்கும் விழா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.
அப்போது மவாட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா 3ம் அலையை தடுக்கும் பொருட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் கடந்த 7 நாட்களாக அரசின் வழிகாட்டுதலின்படி மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது பரவி வரும் 3ம் அலை கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வருமுன் காப்போம் என்ற நோக்கத்தில் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் விழிப்புணர்வு காவல்துறை சார்பாக ஏற்படுத்தி வருகிறோம். பொதுமக்களுக்கு விழிப்புணர்வு இருந்தாலே கொரோனா பெருந்தொற்றிலிருந்து நம்மைக் காப்பாற்றி கொள்ளமுடியும். பள்ளிகுழந்தைகளாகிய உங்களுக்கு கல்வி ஒன்று தான் முக்கிய குறிக்கோளாக இருக்கவேண்டும். ஆசிரியர்களின் அறிவுரைகளை கேட்டு வருங்காலத்தில் நீங்கள் மிகப்பெரிய சாதனையாளர்களாக திகழவேண்டும். கல்வி ஒன்றே உங்களை வருங்காலத்தில் சமுதாயத்தில் நல்ல மனிதர்களாக உருவாக்கும்.
மேலும் பொதுமக்கள் முக்கவசம் அணியும் போது வாயையும் மூக்கையும் நன்றாக மூடியவாறு முகக்கவசம் அணிய வேண்டும், அதிலும் 2 முகக்கவசம் அணிவது மிகவும் நல்லது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும், பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் எடுத்துகொள்ள வேண்டும், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசு அறிவித்துள்ள நெறிமுறைகளை கடைபிடித்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று விழிப்புணர்வு வழங்கி சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி விளாத்திகுளம் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், விளாத்திகுளம் வியாபாரிகள் சங்க பொருளாளர் மாரியப்பன், விளாத்திகுளம் வர்த்தக சங்க பொருளாளர் மேடை சேர்மன் உட்பட விளாத்திகுளம் காவல் நிலைய ஆய்வாளர் . கலா, விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆல்பின் பிரஜிட் மேரி, எட்டையாபுரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜின்னா பீர்முகம்மது, விளாத்திகுளம் குற்ற பிரிவு காவல் ஆய்வாளர் ஆல்வின் ஜோஸ், உதவி ஆய்வாளர்கள் காசிலிங்கம், சரவணன், முத்துமாரி உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.