திருநெல்வேலி -ஆகஸ்ட் -11,2021
திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினர் தற்போது கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவலை தடுக்க பல்வேறு பாதுகாப்பு பணியிலும் ரோந்து பணியிலும் தொடர்ந்து சுழற்சி முறையில் பணி செய்து வருகின்றனர்.காவல் துறையினரின் பாதுகாப்பில் மிகுந்த அக்கறை கொண்டு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் IPS.. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் மாவட்ட காவல்துறையினருக்கு தொடர்ந்து கொரோனா தடுப்பு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி வருகிறார்
இதனடிப்படையில் இன்று மாவட்டத்தில் உள்ள அனைத்து காவலர்களுக்கும் தேவையான PPE Kit, முககவசங்கள், கையுறைகள், சானிடைசர்,Face Shield, Handwash, மற்றும் காவலர்கள் அனைவரும் தன்னைத்தானே அலுவலின் போது பரிசோதித்துக் கொள்ள ஏதுவாக பல்ஸ் ஆக்ஸிமீட்டர் போன்ற பாதுகாப்பு உபகரணங்களை திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ணன், இ.கா.ப., அனைத்து உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் கண்காணிப்பாளர்கள் அவர்களிடம் மாவட்ட காவல் அலுவலகத்தில் வழங்கினார்.