கன்னியாகுமரி – ஆகஸ்ட் – 31,2021
கன்னியாகுமரி மாவட்டம், இன்று மாவட்ட போக்குவரத்து காவல் துறையினர்க்கு முககவசம் மற்றும் முககவச கண்ணாடி போன்ற உபகரணங்கள் வழங்கு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக சிக்னல் முன்பு நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெ. பத்ரி நாராயணன் ஐ.பி.எஸ் கலந்து கொண்டு உபகரணங்கள் வழங்கி சிறப்பித்தார். அவர் பேசும் போது கொரோனா மூன்றாவது அலையை எதிர் கொள்ள காவல் துறையினர் அனைவரும் தயாராக வேண்டும் என்றும், முக கவசம் மற்றும் முககவச கண்ணாடியை அணியும் போது எச்சில் மூலம் வரும் தொற்று குறையும் என்றும், காவல்துறையினர் தங்களது உடல் நலனில் அக்கறை கொள்ள வேண்டும் என்றும் கூறினார். இந் நிகழ்ச்சியில் நாகர்கோவில் உட்கோட்ட பொறுப்பு காவல் துணை கண்காணிப்பாளர் தங்கவேல் மாவட்ட தனி பிரிவு காவல் ஆய்வாளர் பெரனார்ட் சேவியர் நாகர்கோவில் போக்குவரத்து ஒழுங்கு படுத்தும் பிரிவு காவல் ஆய்வாளர் அருண் மற்றும் காவல் ஆளினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.