திருப்பத்தூர் – ஆகஸ்ட் – 17,2021
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் உட்கோட்டம், கந்திலி காவல் நிலைய பெண் தலைமை காவலர் ஆதிலட்சுமி அயற்பணியாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார் மேற்படி பெண் தலைமை காவலர் கொரோனா நோய் தொற்று காலத்தில் மருத்துவமனையில் முன்கள் பணியாளராக சிறப்பாக பணிபுரிந்தமைக்கும், திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி உட்கோட்ட காவல் நிலையங்களில் இருந்து சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்புடைய வழக்குகளில் காயமுற்று திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் நபர்களின் விவரங்கள் குறித்து உடனுக்குடன் உரிய காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அதன் மூலம் உடனடி சட்ட நடவடிக்கை மேற்கொள்ள உதவியாக இருந்து வந்துள்ளார்.
எனவே அவரது சிறப்பான பணியை பாரட்டி 15.08.2021-ந் தேதி நடைபெற்ற சுதந்திர தின விழாவில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் கேடயமும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தக்க வெகுமதியும் வழங்கி கௌரவித்தார்