திண்டுக்கல் – ஆகஸ்ட் – 25,2021
75-வது சுதந்திர தின வைர விழா கொண்டாட்டத்திற்காக சி.ஆர்.பி.எப் வீரர்களின் மிதிவண்டி பேரணியை திண்டுக்கல்லில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
75-வது சுதந்திர தின வைர விழாவை கொண்டாடும் விதமாக கன்னியாகுமரி முதல் டெல்லி ராஜ்காட் வரை மத்திய பாதுகாப்பு படையினர் (CRPF) 20 பேர் சைக்கிள் பேரணி மேற்கொண்டனர்.
இன்று காலை 11.00 மணிக்கு திண்டுக்கல் காமலாபுரம் பிரிவு அருகே வந்த வீரர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்
வீரர்களுக்கு காவல்துறையினர் பழச்சாறு, தண்ணீர் பாட்டில்கள்,பிஸ்கட் மற்றும் பழங்கள் வழங்கினார்கள். காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வீரர்களுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள். மேலும் மிதிவண்டி பயணத்தை கொடியசைத்து துவக்கி வைத்து வீரர்களுடன் இணைந்து மிதிவண்டி பயணத்தை மேற்கொண்டார்கள். மேலும் வீரர்களின் பயணம் சிறப்பாக நடைபெற வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தார்