78.4 F
Tirunelveli
Wednesday, January 19, 2022
முகப்பு மாவட்டம் திருநெல்வேலி கொலை கொள்ளை போன்ற சமுகவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு மாவட்ட...

கொலை கொள்ளை போன்ற சமுகவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு

திருநெல்வேலி -ஆகஸ்ட் – 14,2021

பாளை தாலுகா காவல்நிலையம் :

திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட எதிரிகளை காவல்துறையின் துரித விசாரணையின் மூலம் திருட்டு வழக்கில் தொடர்புடைய எதிரிகளை விரைந்து கைது செய்து நகைகளை மீட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய தாலுகா காவல் நிலைய காவல் ஆய்வாளர்
பாலகிருஷ்ணன், தலைமையிலான காவல் துறையினருக்கும்,

மானூர்காவல்நிலையம் :

மானூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்த நபர்கள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களை உடனடியாக கைது செய்து போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் சீர்மிகு பணியைப் பாராட்டி மானூர் காவல் ஆய்வாளர் ராமர், தலைமையிலான காவல்துறையினருக்கும்,

அம்பை காவல்நிலையம்

அம்பாசமுத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் காணாமல் போனதாக தேடப்பட்ட வழக்கில் காணாமல் போன நபரை கண்டுபிடித்து உரியவரிடம் ஒப்படைத்த அம்பாசமுத்திரம் காவல் துறையினருக்கும்,

நாங்குநேரி காவல்நிலையம்:

நாங்குநேரி மற்றும் மூலக்கரைப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை விரைவில் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்திய நாங்குநேரி வட்ட காவல் ஆய்வாளர் காளியப்பன் அவர்கள் தலைமையிலான காவல்துறையினருக்கும், திருநெல்வேலி மாவட்ட பகுதிகளில் கொள்ளை, மதுபான பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்தல் மற்றும் குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்த காவல் அதிகாரிகள், ஆளிநர்கள் மற்றும் தனிப்படையினருக்கு திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன்‌., இ.கா.ப., மேற்கண்ட வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினரின் சீர்மிகு பணியைப் பாராட்டி வெகுமதி வழங்கி, தனது வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

19,724FansLike
57FollowersFollow
381SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

நெல்லையில்‌‌‌ வாலிபர் மீது குண்டாஸ் போலீஸ்‌‌‌ கமிஷனர் அதிரடி

0
திருநெல்வேலி - ஜன - 19,2022 கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த நபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாநகரம் பாளையங்கோட்டை பகுதியில் பல்வேறு வழக்குகளில்...

எஸ்பி அலுவலகத்திற்கு புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் மரியாதையாக நடந்துவரும் காவலருக்கு எஸ்பி பாராட்டு

0
திருநெல்வேலி - ஜன -19,2022 புகார் அளிக்க வரும் பொதுமக்களிடம் பிரச்சனைகளை கேட்டறிந்து அவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு சிறப்பாக பணிபுரிந்து வரும் காவலருக்கு பாராட்டு. திருநெல்வேலி மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவலர் ஜெஸ்கர்,...

“கூடைபந்து போட்டியில் பதக்கம் வென்ற ஆயுதபடை காவலருக்கு எஸ்பி பாராட்டு…..

0
தூத்துக்குடி - ஜன -19,2022 தமிழக காவல் துறையினருக்கான மண்டலங்களுக்கிடையே நடைபெற்ற போட்டிகளில் கூடைப்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று இரண்டாம் இடத்தை பிடித்து பதக்கங்கள் பெற்ற தூத்துக்குடி மாவட்ட காவல்துறையைச் சேர்ந்த தலைமை...

“சுமார் 30,ஆயிரம்‌‌‌ மதிப்புள்ள 45,கிலோ குட்கா மற்‌‌‌றும்‌‌‌ பைக்‌‌‌ பறிமுதல் இருவர் கைது”

0
தூத்துக்குடி - ஜன -18,2022 தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக விற்பனைக்காக புகையிலை பொருள்களை இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்த இருவர் கைது - ரூபாய் 33,500/- மதிப்புள்ள...

“இலங்கைக்கு கடத்த முயன்ற 170,கிலோ கஞ்சா பறிமுதல் 9,பேர் கைது”

0
நாகப்பட்டினம் - ஜன -18,2022 செய்தியாளர் - சோமாஸ்கந்தன் சட்ட விரோதமாக கஞ்சா கடத்த முயன்ற 09 நபர்கள் கைது மற்றும் 170 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கஞ்சா கடத்தல்...

தற்போதைய செய்திகள்