86.2 F
Tirunelveli
Sunday, September 25, 2022
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி "கோவில்பட்டி வாலிபர் கொலை வழக்கில் சிறப்பாக புலானாய்வு செய்து கொலையாளியை கண்டுபிடித்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட...

“கோவில்பட்டி வாலிபர் கொலை வழக்கில் சிறப்பாக புலானாய்வு செய்து கொலையாளியை கண்டுபிடித்த தனிப்படை போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு….

தூத்துக்குடி – ஆகஸ்ட் – 02,2021

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் எதிரி கைது – மேற்படி வழக்கில் துப்பு துலக்கி எதிரியை கண்டு பிடித்து விரைந்து கைது செய்த தனிப்படையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டு.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதியைச் சேர்ந்த பொய்யாழி மகன் மதன்குமார் (22) என்பவர் கோவில்பட்டி மந்திதோப்பு பாண்டவர்மங்கலம் குளத்துகரை அருகே கடந்த 29.07.2021 அன்று மர்ம நபரால் கழுத்தில் வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரணை மேற்கொண்டனர்.

இச்சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு, கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் உதயசூரியன் மேற்பார்வையில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி, நாலாட்டின்புதூர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் பத்மாவதி ஆகியோர் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் குருசந்திர வடிவேல், . துரைச்சாமி மற்றும் காவலர்கள் அடங்கிய தனிப்படை அமைத்து எதிரியை விரைந்து கைது செய்ய உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின்பேரில் மேற்படி தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டதில் கோவில்பட்டி அருகே உள்ள தீத்தாம்பட்டியைச் சேர்ந்த 17 வயது இளஞ்சிறார் ஒருவர் மதன்குமாரை கொலை செய்தது தெரியவந்தது. மேற்படி இளஞ்சிறாரும், கொலை செய்யப்பட்ட மதன்குமார் என்பவரும் நெருங்கிய நண்பர் ஆவார்கள். அவர்கள் இருவரும் ஒரே பெண்ணை காதலிப்பதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் எதிரியான இளஞ்சிறார், தன்னுடைய காதலுக்கு மதன்குமார் இடையூறாக இருப்பதாக கருதி மதன்குமாரை தீர்த்துக்கட்டிவிடலாம் என்று திட்டமிட்டு சம்பவ இடமான காட்டுப்பகுதியில் அரிவாளை மறைத்து வைத்துவிட்டு, மதன்குமாரை மது அருந்துவதற்கு சம்பவ இடத்திற்கு வரச் சொல்லியிருக்கிறார். மதன்குமார் ஒரு பைக்கிலும், இளஞ்சிறார் ஒரு பைக்கிலும் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கு இருவரும் சந்தித்து மதன்குமாரை மது அருந்த வைத்துள்ளார். அப்போது இளஞ்சிறார் அப்பகுதியில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து, மது அருந்திக் கொண்டு இருந்த மதன்குமாரை கழுத்தில் வெட்டி கொலை செய்துள்ளார். பின் அந்த அரிவாளை அருகிலுள்ள குளத்தில் போட்டுள்ளதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. பின் தனிப்படை போலீசார் மேற்படி இளஞ்சிறாரை கைது செய்து, சம்பவ இடத்திற்கு அழைத்துச் சென்று குளத்திலிருந்து அரிவாளை கைப்பற்றியும், அவர் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

இவ்வழக்கில் துரிதமாக விசாரணை மேற்கொண்டு எதிரியை கண்டு பிடித்து, அவரைக் கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் பாராட்டினார்.

19,724FansLike
104FollowersFollow
389SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

“தென் மாவட்டங்களில் சமுக அமைதியை நிலைநாட்ட பதற்றமான பகுதிகளில் அமைதி கூட்டம் நடத்த காவல்துறை...

0
மதுரை - செப் - 25,2022 நியூஸ் - webteam திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் நகர் உட்கோட்டம், தெற்கு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட திண்டுக்கல் குடைபாறைப்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பால்ராஜ் (43) என்பவர் 24.09.2022-ம்...

தமிழகத்தில் பொது அமைதியை சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபட்டால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது...

0
சென்னை - செப் -25,2022 செய்தியாளர் - கே.நியாஸ் நாடு முழுவதும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குச் சொந்தமான அலுவலகங்கள் மற்றும் நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை (NIA) அதிகாரிகள் 22.09.2022 அன்று...

நெல்லையில் உலக இருதய தினம் மற்றும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் போலீஸ்...

0
நெல்லை மாநகரம் - செப் -25,2022 நெல்லை அண்ணா விளையாட்டு அரங்கத்திலிருந்து உலக இருதய தின மற்றும் போதை ஒழிப்புவிழிப்புணர்வு மராத்தான் போட்டியில் கலந்து கொண்டு அறிவுரைகளை வழங்கிய நெல்லை மாநகர கிழக்கு காவல்...

உலக புகழ்பெற்ற குலசை தசரா திருவிழா பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து நெல்லை சரக ...

0
தூத்துக்குடி - செப் -25,2022 நாளை கொடியேற்றத்துடன் தொடங்கவுள்ள குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழாவை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி...

தென்காசி மாவட்டத்தில் அபகரிக்கபட்ட 9,கோடி மதிப்‌‌‌புள்‌‌‌ள நிலம் மீட்பு நிலமோடி தடுப்பு போலீசார்...

0
தென்காசி - செப் - 24,2022 நியூஸ் - webteam 9 கோடி மதிப்பிலான நிலத்தை மீட்டு உரிய நபரிடம் ஒப்படைத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவு காவல் துறையினர் தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே...

தற்போதைய செய்திகள்