கோயம்புத்தூர் – ஆகஸ்ட் – 17,2021
கோவையில் பி.ஆர்.எஸ் வளாகத்தில் உயர் காவல் அதிகாரி வாகனத்தை ஓட்டி வந்த மர்ம நபரை பிடித்த பெண் போலீசாரை மாவட்ட எஸ்.பி செல்வநாகரத்தினம் பாராட்டி சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
கோவை மாவட்டம், பிஆர்எஸ் வளாகத்தில் காப்பு தணிக்கை செய்வதற்காக ஆயுதப்படையை சேர்ந்த தலைமை பெண் காவலர் செண்பக வடிவு என்பவர் சென்று கொண்டிருந்தார்.
காவலர் குடியிருப்பு வளாகத்திற்குள் காவல் உயர் அதிகாரியின் வாகனம் சென்றுள்ளது. அதே வழியாக வந்த ஆயுதப்படை பெண் தலைமை காவலர் உயர் அதிகாரியின் வாகனத்தை உற்றுநோக்கும் போது வாகனத்தை ஓட்டி வந்த நபரின் தலையில் அசோக சின்னம் உள்ள தொப்பியை அவர் முரண்பாடாக வைத்துள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே பெண் தலைமை காவலர் அந்த வாகனத்தை வழிமறித்து விசாரிக்கும் போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
அதனால் ஆயுதப்படை பெண் தலைமை காவலர் உடனே காவல் கட்டுப்பாட்டு அறை எண் 100-க்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு இத்தகவலை தெரிவித்துள்ளார்.
அதே நிலையில் அந்த வழியாக வந்த 2 சிறப்பு காவல் படையை சேர்ந்த காவலர்களை உதவிக்கு அழைத்து உயர் அதிகாரியின் வாகனத்தை இயக்கி வந்த அடையாளம் தெரியாத நபரை வாகனத்தை விட்டு இறக்கி விசாரித்துள்ளனர்.
இந்நிலையில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவை மாநகர காவல் உதவி ஆய்வாளர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்.
மேற்படி உயர் அதிகாரியின் வாகனத்தை இயக்கி வந்த அடையாளம் தெரியாத நபரை கோவை மாநகர காவல் உதவி ஆய்வாளரின் வசம் ஒப்படைத்துவிட்டு
உடனே இத்தகவலை கோவை மாவட்ட ஆயுதப்படை அலுவலகத்திற்கு கூறியும்,
பின்னர் கோவை மாவட்ட ஆயுதப்படை தனிப்பிரிவு தலைமை காவலர்
எட்வர்டு ராஜ் அவர்களுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இச்செயலுக்காக கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வனநகரத்தினம் இ.கா.ப.,
கோவை மாவட்ட ஆயுதப்படை பெண் தலைமை காவலர் செண்பக வடிவு என்பவரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்து பாராட்டி பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்.