தூத்துக்குடி – ஆகஸ்ட் – 18,2021
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஆண்டு வீரமரணமடைந்த காவல்துறை வீரர் சுப்பிரமணியனின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரடியாக அன்னாரது இல்லத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
கடந்த ஆண்டு அன்று தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவலர் சுப்பிரமணியன் மணக்கரை அருகே ரவுடியை கைது செய்யச் சென்றபோது நாட்டு வெடிகுண்டு தாக்குதலில் வீரமரணமடைந்தார். இன்று அவரது முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி ஏரல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பண்டாரவிளையில் உள்ள அவரது இல்லத்தில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் நேரில் சென்று அவரது திருஉருவ படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
அவரைத் தொடர்ந்து ஸ்ரீவைகுண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேசன் உட்பட காவல்துறையினரும் அஞ்சலி செலுத்தினர்.