தூத்துக்குடி – ஆகஸ்ட் – 29,2021
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் புதிதாக நிறுவப்பட்ட ஸ்டார் ஆரோக்ய டிஜி சேவா என்னும் மருத்துவ சிகிச்சை மையத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பசுவந்தனை – கோவில்பட்டி ரோட்டில் உள்ள துர்கா கார்டன் என்ற இடத்தில் ஸ்டார் ஹெல்த் இன்சுரன்ஸ் மற்றும் பப்ளிக் ஹெல்த் பவுண்டேசன் சார்பாக புதிதாக ஸ்டார் ஆரோக்ய டிஜி சேவா என்ற மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி புதிதாக அமைக்கப்பட்ட இந்த மருத்துவ சிகிச்சை மையத்தை ஓய்வு பெற்ற முன்னாள் காவல்துறை இயக்குனரும் தற்போதைய ஸ்டார் ஹெல்த் இன்சுரன்ஸ் சீனியர் எக்ஸ்க்யூட்டிவ் அதிகாரியும் மருத்துவ சிகிச்சை மையத்தின் பொறுப்பாளருமான பி.எம். நாயர் முன்னிலையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் இன்று குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர்.
இதற்கான ஏற்பாடுகளை நாகம்பட்டியை சேர்ந்த ஸ்டார் ஹெல்த் இன்சுரன்ஸ் நிறுவனத்தின் பங்குதாரரான ஜெகநாதன் என்பவர் செய்திருந்தார். இதில் ஸ்டார் ஆரோக்ய டிஜி சேவா என்னும் மருத்துவ சிகிச்சை மையத்தின் மருத்துவர் சந்தியா, பசுவந்தனை பஞ்சாயத்து தலைவர் சிதம்பரம், மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர், பசுவந்தனை காவல் நிலைய ஆய்வாளர் சித்ரகலா, மணியாச்சி உட்கோட்ட தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் முருகானந்தம், பசுவந்தனை தனிப்பிரிவு காவலர் கணபதி உள்ளிட்ட காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.