94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் தூத்துக்குடி "சிலம்பம் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற மாணவனுக்கு மாவட்ட எஸ்.பி தலைமையில் பாராட்டு....

“சிலம்பம் போட்டியில் தங்கம் பதக்கம் வென்ற மாணவனுக்கு மாவட்ட எஸ்.பி தலைமையில் பாராட்டு….

தூத்துக்குடி – ஆகஸ்ட் – 22,2021

தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் கலந்துகொண்டு தங்க பதக்கம் வென்ற தூத்துக்குடியை சேர்ந்த மாணவர் சந்தோஷ் குருநாதனை பாரட்டும் நிகழ்ச்சி இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

தங்க பதக்கம் வென்ற மானவனுக்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் தருவை மைதானத்தில் 14.08.2021 அன்று நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் 5 வயதுக்குட்பட்ட பிரிவில் மாநிலம் முழுவதும் இருந்து மொத்தம் 22 மாணவர்கள் போட்டியில் பங்கேற்றனர். இதில் தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்த குருராஜா என்பவரது மகன் சந்தோஷ் குருநாதன் என்ற 5 வயது மாணவன் சிலம்பாட்ட போட்டியில் கலந்துகொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார். இவரை பாரட்டும் நிகழ்ச்சி இன்று தூத்துக்குடி சிவன்கோவில் அருகே உள்ள கவிதா மஹாலில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட எஸ்‌பி பேசியதாவது

அப்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பேசுகையில், தங்க பதக்கம் வென்ற சந்தோஷ் குருநாதன் மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக திகழ்கிறார். இவர் வருங்காலத்தில் மிகச்சிறந்த சாதனையாளராக விளங்குவார். இந்த சிறுவயதிலேயே பெற்றோர்க்கு பெருமை தேடி தந்துள்ளார். 5 வயதிலேயே நமது பாராம்பரிய கலையான சிலம்பத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு மிக சிறந்த பயிற்சி பெற்று போட்டியில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை தேடிதந்துள்ளார். மேலும் இவர் சிலம்பத்தில் இன்னும் நிறைய கற்றுகொண்டு எதிர்காலத்தில் இதேபோன்று பல போட்டிகளில் கலந்துகொண்டு மென்மேலும் பல வெற்றிகள் பெற வேண்டும் என்று வாழ்த்தினார்.

இந்நிகழ்ச்சியில் சந்தோஷ் குருநாதனின் தந்தை குருராஜா, தாயார் யுவராணி, கீதா செல்வமாரியப்பன், தூத்துக்குடி போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் மயிலேறும்பெருமாள், மத்தியபாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபிரகாஷ், உதவி ஆய்வாளர் முருகபெருமாள் மற்றும் சிறுவனின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்