அரியலூர் – ஆகஸ்ட் – 17,2021
அரியலூர் மாவட்டத்தில் உள்ள
அரியலூர், ஜெயங்கொண்டம், குவாகம், வெங்கனூர் மற்றும் தளவாய் காவல் நிலையங்களில் வாகன தணிக்கை செய்யும் போது Body worn camera அணிய வேண்டும் என்ற அறிவுரையை முழுவதுமாக கடைப்பிடித்து மெச்சத் தகுந்த பணியை செய்தமைக்காகவும், கீழப்பழுவூர் காவல் நிலைய சரகம் 13/08/2021 அன்று ஆண்டிபட்டாகாடு கிராமத்தில் கிராவல் மண் திருட்டில் ஈடுபட்ட ஜேசிபி வாகனத்தை பறிமுதல் செய்தமைக்காகவும், மற்றும் செந்துறை காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பொய்யாதநல்லூர் கிராமத்தில் 09/08/2021 அன்று தனிநபர் வீட்டில் பெருமளவிலான குட்கா பறிமுதல் செய்தமைகாகவும் அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா 17/08/2021 இன்று மாவட்ட காவல் அலுவலகத்தில் ஆய்வாளர் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் என 25 நபர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி பாராட்டுகளை தெரிவித்தார்