திருநெல்வேலி – ஆகஸ்ட் – 14,2021
ஆய்வுகூட்டம்:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து உதவி காவல் கண்காணிப்பாளர் மற்றும் துணை காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் இன்று 14.08.2021 மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் வைத்து திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நெ.மணிவண்ண்ன்,IPS., தலைமையில் நடைபெற்றது.
இன்று இக்கூட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து வழக்குகளின் புலன் விசாரணை குறித்தும், வழக்குகள் சம்மந்தமாக எடுக்கப்பட்ட மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், நீதிமன்ற அலுவல்கள் குறித்தும் மற்றும் பல்வேறு நிகழ்வுகள் குறித்தும் ஆய்வு நடைபெற்றது.
எஸ்.பி அறிவுரை :
மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் அனைத்து காவலர்களும் தங்கள் பாதுகாப்பில் முழு கவனம் செலுத்தி முக கவசம் அணிந்து பணி மேற்கொள்ள வேண்டும் எனவும், கைகளை அடிக்கடி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடித்து பணியினை மேற்கொண்டு பணி செய்ய அனைத்து அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கி கண்காணிக்கும் படி உத்தரவிட்டுள்ளார். மேலும் பொதுமக்களுக்கு முககவசம் அணிவதன் பயன்கள் குறித்து ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் மாவட்ட காவல்துறையினரை வெகுவாக பாராட்டினார்.