சென்னை – ஆகஸ்ட் – 12,2021
சென்னை பெருநகர காவல் துறையில் கடந்த 21.04.2021 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களால் “காவல் கரங்கள்” என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டு சிறப்பான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. “காவல் கரங்கள்” மூலம் சென்னை பெருநகர காவலுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளுக்கும் ஆதரவில்லாமல் சுற்றி திரியும் மனநிலை மற்றும் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள், முதியோர்கள், பெண்கள், மற்றும் குழந்தைகளையும் கண்டறிந்து உரிய பாதுகாப்புடன் NGO’s கள் மூலம் மீட்டு தேவைபடுவோருக்கு சிகிச்சை அளித்தும் அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்களிலும் தங்க வைத்து நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவர்களுடைய உரிய முகவரியை கண்டறிந்து அவர்களுடைய பெற்றோருடனும், உறவினர்களுடனும் நல்ல முறையில் சேர்த்து வைக்கும் பணியையும் “காவல் கரங்கள்” சிறப்பான முறையில் செய்து வருகிறது. சென்னை பெருநகர காவலுக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தனியாக சுற்றி திரியும் வட மாநிலத்தை சேர்ந்த மனநலம் மற்றும் உடல்நலம் பாதிக்கப்பட்ட நபர்களை கண்டறிந்து “காவல் கரங்கள்” NGO’s மூலம் மீட்டு அடைக்கலம் கொடுத்தும் தேவைபடுவோருக்கு சிகிச்சை அளித்தும் தொண்டு நிறுவனங்களில் தங்க வைத்து பராமரித்த நபர்களை அவர்களது குடும்பத்தாருடன் சேர்க்க “காவல் கரங்கள்”, அன்பகம், அன்பு ஜோதி, பசியில்லா தமிழகம், Street Vision, Little Hearts, ஆகிய தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து 27 தன்னார்வலர்களின் உதவியுடன் 127 வெளிமாநிலத்தை சேர்ந்தவர்களை கடந்த 25.07.2021 அன்று மாலை 18.50 மணிக்கு Grant Trunk Express மூலம் சென்னை சென்ட்ரலில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள “APNA GHAR” Ashram என்ற தொண்டு நிறுவனத்திடம் கொண்டு சேர்த்து அவர்கள் மூலம் முகவரியை கண்டறிந்து குடும்பத்தாருடன் இணைக்கப்பட்டுள்ளனர். அதேபோல “APNA GHAR” Ashram தொண்டு நிறுவனத்திடம் தங்க வைக்கப்பட்ட தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திராவை சேர்ந்த 14 ஆண்கள் , 24 பெண்கள் என மொத்தம் 38 நபர்களை நல்ல முறையில் அழைத்து வந்து கொரோனா பரிசோதனை செய்து அன்பகம் தொண்டு நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மனநலம் பாதித்த நபர்களை காவல் கரங்கள் மூலம் நேரடியாக விசாரிக்கப்பட்டு கலந்துரையாடி உரிய முகவரியை கண்டறிந்து அவர்களை பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் சேர்த்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, இதில் பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போன நபர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். குறிப்பிடும்படியாக தர்மபுரியைச் சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட மல்லிகா என்பவர் கடந்த 31 வருடங்களுக்கு முன்பு காணாமல் போய் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள “APNA GHAR” Ashram திலிருந்து மீட்டுவரப்பட்டு உரிய விசாரணைக்குப்பின் அவரது மகன் பிரபு முனுசாமி என்பவரிடம் காவல் கரங்களை சேர்ந்த காவல் குழுவினர் தகவல் தெரிவித்தனர். தனது 7 வயதில் காணாமல் போன தாயை 31 வருடங்களுக்கு பிறகு கண்டுப்பிடித்தற்கு காவல் கரங்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார். கள்ளக்குறிச்சியைச்சேர்ந்த ராசாத்தி , வ/60, என்பவர் கடந்த 2013 ம் வருடம் நடந்த கார் விபத்தில் சிக்கி மனநிலை பாதிக்கப்பட்டு காணாமல் போய் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள “APNA GHAR” Ashram திலிருந்து மீட்டுவரப்பட்டு உரிய விசாரணைக்குப்பின் காவல் கரங்களை சேர்ந்த காவல் குழுவினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். குடும்பத்தினர் ராசாத்தியை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவர் இறந்து விட்டதாக நினைத்து காரியம் செய்ததாகவும், ஆனால் தற்போது தனது தாயை உயிருடன் மீட்ட காவல் கரங்களுக்கு மிகவும் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்தனர். கன்னியாகுமரி, நாகர்கோயிலைச் சேர்ந்த ஜானகி என்பர் கடந்த 1 ½ வருடங்களுக்கு முன்பு காணாமல் போய் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள “APNA GHAR” Ashram திலிருந்து மீட்டுவரப்பட்டு உரிய விசாரணைக்குப்பின் காவல் கரங்களை சேர்ந்த காவல் குழுவினர் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மீட்கப்பட்ட ஜானகியின் மகன் ஆனந்த் தனது தங்கைக்கு சில நாட்களில் திருமணம் நடக்க இருக்கிற நிலையில் தனது தாயை கண்டுபிடித்து கொடுத்ததற்கு காவல் கரங்களுக்கு மிகவும் நன்றியை தெரிவித்தார். விருதுநகர் மாவட்டத்தைச்சேர்ந்த மனநிலை பாதிக்கப்பட்ட பொன்பாண்டி, வ/42 என்பவர் பல வருடங்களுக்கு முன்பு காணாமல் போய் இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள “APNA GHAR” Ashram திலிருந்து மீட்டுவரப்பட்டு உரிய விசாரணைக்குப்பின் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். மீட்கப்பட்ட பொன்பாண்டியின் தந்தை சுப்பிரமணி தனது மகன் இறந்து விட்டதாக நினைத்த நிலையில் காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்டது மிகவும் சந்தோஷமாக உள்ளதாக தெரிவித்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஜோதி என்பவர் கடந்த 2014 ம் ஆண்டு காணாமல் போய் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள “APNA GHAR” Ashram திலிருந்து மீட்டுவரப்பட்டு உரிய விசாரணைக்குப்பின் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். ஜோதியின் கணவர் சோம்லாநாயக் தனது மனைவியை காவல் கரங்கள் மூலம் மீட்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். தமிழகம் மட்டுமல்லாது, ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலத்தை சேர்ந்தவர்களின் உரிய முகவரியை கண்டறிந்து அவர்களின் குடும்பத்தாருடன் சேர்த்து வைக்கும் பணியில் “காவல் கரங்கள்” ஈடுபட்டு வருகிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த 10 நபர்களையும், ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 1 நபரையும், அவர்களுடைய முகவரி கண்டறிந்து மொத்தம் 11 பேரை அவர்களது குடும்பத்தினருடன் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் 11.08.2021 அன்று சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர்ஜிவால், இ.கா.ப கலந்து கொண்டு உரையாற்றி மீட்கப்பட்ட நபர்களுக்கு அரிசி, பருப்பு, சர்க்கரை, உடைகள் போன்ற அத்தியாவாசிய பொருட்கள் அடங்கிய தொகுப்புகளை வழங்கினார். மேலும் காவல் கரங்கள் உதவி மையத்தை சமூக வலை தளங்களான
மூலம் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் புதிய வசதியை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் துவக்கி வைத்தார். மீட்கப்பட்ட நபர்களின் குடும்பத்தினர் சென்னை பெருநகர காவல் ஆணையாளர், காவல் கரங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மனமகிழ்ச்சியுடன் நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர். கடந்த 3 மாதங்களில் இதுவரை 614 நபர்களை மீட்டு உரிய சிகிச்சை அளித்து தங்கும் இடங்களில் பாதுகாப்பாக பராமரித்து வருகிறது. மேலும் இதுவரை காவல் கரங்கள் மூலம் 30 நபர்களை அவர்களது குடும்பத்தாரை கண்டறிந்து நல்ல முறையில் சேர்த்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையாளர்கள் செந்தில்குமார், இ.கா.ப (வடக்கு), திரு.லோகநாதன், இ.கா.ப (தலைமையிடம்) பிரதீப்குமார், இ.கா.ப, (போக்குவரத்து) இணை ஆணையாளர் சாமுண்டீஸ்வரி, இ.கா.ப, (தலைமையிடம்), துணை ஆணையாளர் ராமர், இ.கா.ப (நவீன காவல் கட்டுப்பாட்டு அறை), பாலாஜி சரவணன், (தலைமயிடம்) மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.