திருநெல்வேலி – ஆகஸ்ட் – 19,2021
நெல்லை மாநகர காவல் ஆணையாளர் முனைவர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப தலைமையில், காவல் துணை ஆணையாளர்கள் சுரேஷ்குமார் சட்டம் மற்றும் ஒழுங்கு சுரேஷ்குமார் குற்றம் மற்றும் போக்குவரத்து அலுவலக பணியாளர்கள் மற்றும், காவல் ஆளிநர்கள் ஒன்றிணைந்து மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று சாதி, இன,மத மற்றும் மொழி பாகுபாடின்றி அனைவரிடமும் வன்முறையின்றி ஒற்றுமையுடனும் இருப்பேன் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்