திண்டுக்கல் – ஆகஸ்ட் – 19,2021
திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் அறிவுறுத்தலின்படி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் வெள்ளைச்சாமி அவர்களின் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சந்திரன் பயிற்சி காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணிபுரியும் அமைச்சுபணியாளர்கள், காவல்துறையினர் ஆகியோர்கள் கலந்து கொண்டு நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர் .