94.9 F
Tirunelveli
Tuesday, March 28, 2023
முகப்பு மாவட்டம் சமுக விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் நேரடியாக தகவல் வழங்‌‌‌கலாம்‌‌‌ - மாவட்ட...

சமுக விரோத செயல்களில் ஈடுபடுவோர் குறித்து பொதுமக்கள் நேரடியாக தகவல் வழங்‌‌‌கலாம்‌‌‌ – மாவட்ட எஸ்‌‌‌.பி உதவி எண் வழங்‌‌‌கி அறிவிப்‌‌‌பு

இராணிபேட்டை- ஆகஸ்ட் – 28,2021

இராணிப்பேட்டை மாவட்டத்தில் முக்கிய சட்டம் – ஒழுங்கு பிரச்சனை, சட்ட விரோத செயல்கள் , ரவுடிசம் உள்ளிட்ட குற்றங்கள் குறித்தும் காவலர்களின் ஒழுங்கீன நடவடிக்கை மற்றும் லஞ்சம் தொடர்பான ரகசிய தகவல்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் நேரடியாக தெரிவிக்க பொதுமக்கள் உதவி எண் அறிமுகம்

இராணிப்பேட்டை மாவட்டத்தில் நிகழும் முக்கிய சட்டம் – ஒழுங்கு பிரச்சனை, சட்ட விரோத செயல்கள், ( கஞ்சா, குட்கா , காட்டன், லாட்டரி , கள்ளச்சாராயம் விற்பனை செய்தல் மற்றும் மணல் கடத்தல் உள்ளிட்ட) ரவுடியிசம், காவல்துறை அதிகாரிகள் / ஆளிநர்கள் தொடர்பான லஞ்சம் மற்றும் ஒழுங்கீன நடவடிக்கைகள் குறித்த புகார்கள் எதுவாக இருந்தாலும் பொதுமக்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரடியாக தெரிவிக்க கீழ்க்கண்ட அலைபேசி எண்ணில் அழைத்தோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தொடர்பு எண் 7530026333
பொதுமக்களுக்கான மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் நேரடி தொடர்பு எண் அறிமுக நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். தீபா சத்யன் இ. கா. ப., அவர்களால் இன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடத்தப்பட்டது. தொடர்ந்து இதுதொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவிக்கையில் முக்கிய தகவல் அளிக்கப்படும் தகவலாளிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பண வெகுமதி அளிக்கப்படும் என்றும், தகவல் அளிப்பவர்கள் பற்றிய விவரங்கள் இரகசியம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் இராணிப்பேட்டை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முத்துக்கருப்பன் , இராணிப்பேட்டை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பூரணி காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

19,724FansLike
132FollowersFollow
392SubscribersSubscribe

முக்கிய செய்திகள்

தூத்துக்குடியில் ஆயுத படை காவலர்கள் காவல்நிலைய பணிக்கு நியமனம் செய்யும் கலந்‌‌‌தாய்‌‌‌வு கூட்டம் ...

0
தூத்துக்குடி - மார்ச் -27,2023 newz - webteam தூத்துக்குடி மாவட்டத்தில் ஆயுதப்படை காவலர்கள் தாலுகா காவலர்களாக பணி மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் ...

அரியலூரில் கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நேர்மைக்கு மாவட்ட...

0
அரியலூர் - மார்ச் -27,2023 newz - webteam கீழே கிடந்த பையை மாவட்ட காவல் அலுவலகத்தில் ஒப்படைத்த நபர்களின் நற்செயலினை பாராட்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு. அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் மேட்டுகிருஷ்ணாபுரம்...

நெல்லை மாவட்டத்தில் 3,கோடி மதிப்புள்ள 1200,கிலோ கஞ்‌‌‌சா டிஐஜி,எஸ்பி்‌‌‌ முன்னிலையில் தீயிட்‌‌‌டு அழிப்‌‌‌பு….

0
திருநெல்வேலி - மார்ச் - 27,2023 newz - webteam தென் மாவட்டங்களில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 3 கோடி மதிப்புள்ள 1211 கிலோ கஞ்சா, திருநெல்வேலி...

பெண் காவலர்களின் 50 ஆண்டுகால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையில் தொடங்கிய சைக்கில்‌‌‌...

0
நெல்லை மாநகரம் - மார்ச் -26,2023 newz - webteam தமிழக காவல் துறையில் பெண் காவலர்கள் பணியில் சேர்ந்து 50 ம் ஆண்டு பொன்விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு சைக்கிள் பேரணி வந்த பெண்...

பெண்காவலர்களின் 50,ஆண்டு கால பணி சேவை நிறைவை முன்னிட்டு சென்னையிலிருந்து துவங்கிய சைக்கிள் பேரணியை...

0
தூத்துக்குடி - மார்ச் -25,2023 newz - webteam தமிழ்நாடு காவல்துறையில் பெண்கள் பணிக்கு சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு அதை கொண்டாடும் விதமாக ‘காவல் பணியில் பெண்கள்” என்ற தலைப்பில் தமிழ்நாடு...

தற்போதைய செய்திகள்