மதுரை – ஆகஸ்ட் – 06,2021
மதுரை மாநகர் எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் குற்றசெயல்கள் நடைபெறாமல் முன்கூட்டியே
தடுப்பதற்காகவும், குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணிப்பதற்கும் TVS நிறுவனம் சார்பாக சம்மட்டிபுரம் பகுதியில் 11 கேமராக்களும், HMS காலனி பகுதியில் 19 கேமராக்களும் பொருத்தப்பட்டு, அவற்றை கண்காணிப்பதற்காக மதுரை TVS ரப்பர் கம்பெனி அருகில் உள்ள புறக்காவல் நிலையத்தில் CCTV கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி CCTV கண்காணிப்பு மையத்தை மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா,IPS., திறந்து வைத்தார் இதே போல் பொதுமக்கள் நலன் கருதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த விரும்பினால் மதுரை மாநகர வாட்ஸ் அப் குற்ற முறையீட்டு எண்ணில் (83000-21100) தொடர்பு கொள்ளவும்….