திருநெல்வேலி – ஆகஸ்ட் -21,2021
Police media tamil Police media tamil
நெல்லை மாநகர காவல் நிலையங்களுக்கு அரசால் வழங்கப்பட்ட வழக்கு சம்பந்தமாக தடயங்களை சேகரிக்கும் மற்றும் தடயங்களை கையாளும் விசாரணை உபகரணங்களை ஆய்வுசெய்து அறிவுரை வழங்கிய நெல்லை மாநகர காவல் ஆணையாளர்
திருநெல்வேலி மாநகரத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களுக்கும் அரசால் வழங்கப்பட்ட வழக்கு விசாரணை சம்பந்தமாக தடயங்களை சேகரிக்கும் மற்றும் தடயங்களை கையாளும் விசாரணை உபகரணங்களை விசாரணை உபகரணங்களை, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் இன்று மாநகர காவல் ஆணையாளர் செந்தாமரைக் கண்ணன் இ.கா.ப ஆய்வு செய்து அனைத்து காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவல் அதிகாரிகளுக்கு வழக்கு விசாரணை சம்பந்தமாக அறிவுரை வழங்கினார் . உடன் நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர் சுரேஷ்குமார் சட்டம் மற்றும் ஒழுங்கு சுரேஷ்குமார் குற்றம் மற்றும் போக்குவரத்து கூடுதல் காவல் துணை ஆணையாளர்கள் ஞானசேகரன் சங்கர் CWC நுண்ணறிவு பிரிவு காவல் உதவி ஆணையாளர் ஆறுமுகம் மற்றும் நுண்ணறிவு பிரிவு காவல் ஆய்வாளர் ரமேஷ் கண்ணன் கலந்து கொண்டனர்