சென்னை – ஆகஸ்ட் – 19,2021
துரைப்பாக்கம் பகுதியில் வாலிபரை தாக்கி காரில் ஏற்றி வந்த 2 நபர்களை வாகன சோதனையின் போது கைது செய்த சிறப்பு உதவி ஆய்வாளர் .ஸ்ரீதரன் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
, துரைப்பாக்கம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர், ஸ்ரீதரன், கடந்த 08.08.2021 அன்று இரவு துரைப்பாக்கம், சி.எல்.மேத்தா சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது அவ்வழியே வேகமாக வந்த காரை நிறுத்தி விசாரணை செய்த போது, காரில் காயத்துடன் இரண்டு கைகள் கட்டப்பட்ட நிலையிலிருந்த குணசேகரன் என்பவர் “தன்னை காப்பற்றுங்கள்” என கூறி அலறியுள்ளார். சிறப்பு உதவி ஆய்வாளர் காரில் இருந்த 3 நபர்களை கீழே இறக்கி விசாரணை மேற்கொண்டதில், விஜய் தன்னுடைய காதலியுடன் பாரதி அவென்யூ, ஈஞ்சம்பாக்கம் பகுதியில் பேசிக்கொண்டிருந்த போது, அங்கு வந்த குணசேகரன் மற்றும் அவரது நண்பர் மதிசெல்வம் ஆகிய இருவரும் கிண்டல் செய்து விஜயின் காதலியின் மேல் கை போட்டுள்ளனர். உடனே விஜய் அருகிலிருந்த தனது நண்பர்களை வரவழைத்து மேற்படி குணசேகரனை தாக்கி, மிரட்டி காரில் ஏற்றிவந்தது தெரியவந்தது. நீலாங்கரை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து குணசேகரனை தாக்கிய வழக்கில் சம்பந்தப்பட்ட 1) விஜய் (வ / 23), பம்மல் 2) கிறிஸ்டோபர் (வ / 21), பம்மல் 3) பிரேம் (வ /23), பம்மல் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.மேலும் இதில் சம்பந்தப்பட்ட 17 வயது இளஞ்சிறார் ஒருவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் விஜயின் காதலி, அளித்த புகாரின் பேரில் குணசேகரன் (வ/24), சித்தாலப்பாக்கம் 2) மதிசெல்வம் (வ/ 32), வெட்டுவாங்கேணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சிறப்பாக பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஸ்ரீதரன், என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.