சென்னை – ஆகஸ்ட் – 25,2021
ஐஸ்அவுஸ் பகுதியில் இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டுவிட்டு தப்பியோடிய 2 சந்தேக நபர்கள் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த சக்திவேல் என்பவரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.
சென்னை, திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வ/32), என்பவர் கடந்த 20.08.2021 அன்று அதிகாலை தனது வீட்டிற்கு வெளியே வந்த போது, அங்கு சந்தேகத்திற்கிடமாக இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தை தள்ளிக்கொண்டு அங்கு உள்ள வீடுகளை நோட்டமிட்டுள்ளனர். உடனே சக்திவேல் அவர்களிடம் சென்று விசாரணை செய்த போது, இரண்டு நபர்கள் இருசக்கர வாகனத்தை சாலையில் போட்டு விட்டு தப்பி ஓடியுள்ளனர். மேற்படி சம்பவம் குறித்து சக்திவேல் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார். ஐஸ்அவுஸ் காவல் நிலைய போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது, அதில் இரும்பு ராடு மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. மேலும் இருசக்கர வாகனத்தை கைப்பற்றி தப்பியோடிய 2 நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். சந்தேக நபர்கள் குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்த சக்திவேல் என்பவரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.