திண்டுக்கல் – ஆகஸ்ட் -15,2021
இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற 75வது சுதந்திர தின விழாவில் திண்டுக்கல் மாவட்டம் காவல்துறையில் திறமையாக பணி புரிந்ததற்காக பழனி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் இசக்கி ராஜாவிற்க்கு மாவட்ட ஆட்சியர் மற்றும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் பாராட்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.
ஆனால் பயிற்சியின் போது ஏற்பட்ட காயத்தின் காரணமாக மருத்துவ விடுப்பில் இருப்பதினால் அவரால் நேரில் சென்று பாராட்டு சான்றிதழ் பெற இயலவில்லை என்பது வருத்தத்துக்குரியது…
மேலும் தன்னுடைய பேஸ்புக், இணையதளத்தில் எனக்கு உறுதுணையாக இருந்த என்னுடைய உயரதிகாரிகள், சக அதிகாரிகள் மற்றும் காவலர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். என்று குறிப்பிட்டு உள்ளார்.
மேலும் நாம் இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்…சுதந்திர
அனைவருக்கும் சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.