சென்னை – ஆகஸ்ட் -19,2021
கீழ்பாக்கம் பகுதியில் பெண்ணிடம் தவறாக நடந்த நபர் மற்றும் செல்போன் பறிப்பு வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் என இரண்டு நபர்களை சி.சி.டி.வி கேமரா உதவியுடன் கைது செய்த கீழ்பாக்கம் உதவி ஆணையாளர் தலைமையிலான காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர்சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
கீழ்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 30 வயது பெண்மணி கடந்த 13.07.2021 அன்று இரவு தனது இருசக்கர வாகனத்தில் கீழ்பாக்கம் காடர்ன் ரோடு, பவன்ஸ் பள்ளி அருகில் சென்று கொண்டிருந்த போது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர், மேற்படி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார். மேற்படி சம்பவம் குறித்து மேற்படி பெண், கீழ்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கீழ்பாக்கம் உதவி ஆணையாளர் ரமேஷ் தலைமையில், உதவி ஆய்வாளர் சுப்பிரமணியன், தலைமைக்காவலர்கள் ஜெகேந்திரன், (த.கா.18331) பென் ஆர்வின்ஷாம், (த.கா.27873) முதல் நிலைக்காவலர்கள் ரெஜின் திருகுமரன் ஆகியோர் அடங்கிய காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, அவ்விடத்திலிருந்து, மதுரவாயல்வரை இருந்த சுமார் 100 கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து, மேற்படி பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட கவிதாசன் (வ/ 25), விழுப்புரம் மாவட்டம் என்பவரை கைது செய்தனர். மேலும் விசாரணையில் கவிதாசன் தனது நண்பர் சக்திவேல் என்பவருடன் சேர்ந்து கீழ்பாக்கம், அண்ணாநகர் மற்றும் ஜெ.ஜெ.நகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்ததின் பேரில், சக்திவேல் (வ/24), கொளத்தூர் என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டது. மேற்படி எதிரிகள் மீது நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. மேற்படி வழக்கில் சிறப்பாக பணிபுரிந்து குற்றவாளிகளை கைது செய்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர 18.08.2021 அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்
.