சேலம் – ஆகஸ்ட் – 16,2021
சேலம் மாநகரில் கிச்சிப்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சூதாட்ட வழக்கில் 15 நபர்களை கைது செய்து, அவர்களிடமிருந்து வழக்கு சொத்து ரூ.2,21,000/- பறிமுதல் செய்து, சிறப்பாக பணிபுரிந்து அவர்களுக்கு தண்டனை பெற்ற தந்த கிச்சிப்பாளையம் காவல் ஆய்வாளர் சிவகுமார்,காவல் உதவி ஆய்வாளர்கள், சத்தியமூர்த்தி, ராஜா, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்கள் பெரியசாமி, முருகன், வெங்கடாசலம், பன்னீர்செல்வம், தலைமை காவலர்கள் ரமேஷ் செந்தமிழ்ச்செல்வன் செந்தில் மணிகண்டன் மற்றும் முதல் நிலை காவலர்கள் சக்கரவர்த்தி ஜெயக்குமார் ஆகியோரை இன்று சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா, இ.கா.ப., மேற்படி காவல் ஆளிநர்களை நேரில் வரவழைத்து பாராட்டியும் பண வெகுமதி வழங்கியும் கௌரவித்தார்.