சென்னை – ஆகஸ்ட் – 19,2021
பூந்தமல்லி பகுதியில் தலைக்கவசம் அணியாமலும், அதிவேகமாகவும், 7 இருசக்கர வாகனங்களில், சாகசத்தில் ஈடுபட்ட 11 நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தலா ரூ.1,100 அபராதம் வசூலித்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.
சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாலையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டும் நபர்களையும், “பைக் ரேஸ்” என்ற பெயரில் ஆபத்தான முறையில் வாகனங்களை ஓட்டும் நபர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், இ.கா.ப., உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக,பூந்தமல்லி போக்குவரத்து காவல் நுண்ணறிவுப்பிரிவு முதல்நிலைக் காவலர் தர்மதுரை.மற்றும் ராஜேஷ் ஆகியோர் கொலப்பஞ்சேரி, சுங்கச்சாவடி பகுதியில் கண்காணித்து, 08.08.2021 அன்று மாலை பல்சர் , யமஹா , R-15, KTM, Duke போன்ற 7 இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமலும் , அதிவேகமாகவும் , அபாயகரமாகவும் ஓட்டி சாகசம் செய்த 11 நபர்களை பிடித்து வழக்கு பதிவு செய்து, தலா ரூ.1,100/- அபராதம் வசூலித்தனர். மேற்கண்ட வகையில், சிறப்பாக பணிபுரிந்த காவல் குழுவினரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அன்று நேரில் அழைத்துப் பாராட்டி வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார்.