சேலம் – ஆகஸ்ட் – 16,2021
சேலம் மாநகரம் குப்தா நகர், அங்கம்மாள் காலனி, 6வது குறுக்கு தெருவில் வசித்து வரும் அனந்தநாராயணனின் மகன் ஜெய்சுதன் (2 1/2 வயது) தனது அபார நினைவாற்றலின் காரணமாக சிறுவயதிலேயே பல்வேறு நிறுவனங்களின் குறியீடுகள், எண்கள், தேசிய தலைவர்களின் பெயர்கள், பறவைகளின் பெயர்கள், நாடுகளின் தலைநகரங்களின் பெயர்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தவறின்றி கூறியதற்காக இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு எனும் இந்திய சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். இச்சிறுவன் இன்று தனது பெற்றோருடன் சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோதா,இ.கா.ப., நேரில் சந்தித்து சான்றிதழ்களை காண்பித்து வாழ்த்துக்களையும் பாராட்டையும் பெற்றார்.